Saturday, April 30, 2011

துனீசியா மீது கத்தாஃபியின் ராணுவம் தாக்குதல்

tunisia
துனீஸ்: கத்தாஃபியின் ராணுவம் துனீசியாவின் எல்லை நகரமான தஹிபாவின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு துனீசியா ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இப்பிரதேசத்தில் தற்போது லிபியா நாட்டுக்கொடி பறப்பதாகவும், ஆனால், எந்த நேரத்திலும் துனீசியா ராணுவம் வலுவான பதிலடி கொடுக்கும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கத்தாஃபி ராணுவத்தின் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் மத்திய தஹிபாவில் ஒரு பெண் கொல்லப்பட்டார். ஒரு ஆண் குழந்ந்தையின் காலில் குண்டடிப்பட்டது. எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து லிபியா ராணுவம் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது.

வியாழக்கிழமை நகரத்திலிருந்து வெளியேறிய ராணுவம் திரும்பி வர துனீசிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே கத்தாஃபி ராணுவத்தின் எட்டு வாகனங்களை துனீசியா கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே, லிபியாவில் மோதல் வலுவடைந்த சூழலில் வெளிநாட்டினர் உள்பட துனீசியாவின் எல்லை வழியாக தப்பினர்.

அதேவேளையில், மிஸ்ருத்தாவில் கத்தாஃபி ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 12 பேர் கொல்லப்பட்டனர் .இந்நகரத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களைக் குறித்து விசாரணை நடத்தப்படும் ஐ.நா சிறப்புக்குழு கூறியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza