புரூலியா:புரூலியா ஆயுத மழை தொடர்பாக கிம் டேவியும், பீட்டர் ப்ளீச்சும் வெளியாக்கிய ரகசிய செய்திகள் இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக மூடி வைத்த ரகசியமாகும். புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டியது தொடர்பாக சில ஊகங்கள் நிலவின. இதுவெல்லாம் அரசு சமர்த்தாக பிரச்சாரம் செய்தவையாகும்.
பங்களாதேசுக்கு கொண்டுபோக விருந்த ஆயுதங்கள் தவறுதலாக புரூலியாவில் கொட்டப்பட்டதாக வதந்தி நிலவியது. பல்கேரியாவில் அரசு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 300 ஏ.கெ.47 துப்பாக்கிகள், 10 ராக்கெட் லாஞ்சர்கள், 100 பீரங்கி க்ரேனேடுகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் ஆகியவற்றை மரப்பெட்டியில் அடைத்து லாட்வியாவிலிருந்து ஆன்றோனோவ் விமானத்திலிருந்து மே.வங்க மாநிலம் புரூலியாவில் கொட்டப்பட்டது.
இரண்டாவது நாள் விமானம் நாட்டின் வான் எல்லைக்குள் பிரவேசித்ததைத் தொடர்ந்து இந்திய விமான படை மிக் 21 விமானங்கள் உபயோகித்து வலுக்கட்டாயமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கியது. விமானத்திலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். டென்மார்க்கைஸ் சார்ந்த கிம் டேவி, பிரிட்டீஷ் ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச், ஐந்து லாத்வியா நாட்டைஸ் சார்ந்த விமானப் பணியாளர்கள் ஆகியோர் அந்த விமானத்திலிருந்தனர்.
இதில் கிம் டேவி சமர்த்தாக தப்பிவிட்டார். ப்ளீச்சும் விமானப் பணியாளர்களும் கைதாகினர். 204 பெப்ருவரி 14-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப்ளீச், இந்திய குடியரசு தலைவர் மன்னிப்பு அளித்ததைத் தொடர்ந்து விடுதலைஸ் செய்யப்பட்டார்.விமாணப் பணியாளர்கள் முன்னரே விடுதலைஸ் செய்யப் பட்டுவிட்டனர்.
ப்ளீச்சை விடுதலை செய்த பிறகும், ஏன், விமானம் இந்தியாவிற்குள் நுழைந்தது? ரேடாரின் கண்ணில் படாமல் எவ்வாறு ஆயுதங்கள் கொட்ட முடிந்தது? என்பது குறித்த கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்காமல் மர்மம் நீடித்துவந்தது. இந்த கேள்விகளுக்கு கிம் டேவியின் பேட்டி பதிலாக அமைந்துள்ளது.
கிம் டேவியின் பேட்டி:
கராச்சியிலிருந்து எரிபொருளை ஏற்றிய விமானம் முதலில் வாராணாசியில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஏழு மணிநேரம் அங்கு விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் அரசிடமிருந்து இவ்விமானத்தை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும், இந்தியாவில் விமானம் பறப்பதற்கோ, தரையிறக்கி நிறுத்தவோ தடை விதிக்கப்படவில்லை.
வாரணாசியிலிருந்து விமானம் நேராக புரூலியாவிற்கு சென்று அங்கு வானிலிருந்து ஆயுதங்களை கொட்டியது. பின்னர் கொல்கத்தாவில் எரிபொருளை நிரப்பிய பிறகு தாய்லாந்து நாட்டின் புக்கட்டிற்கு சென்றுள்ளது.
மூன்று தினங்களுக்கு பிறகு கராச்சியை நோக்கி பறந்த விமானம் வங்காள விரிகுடா கடலில் மையங்கொண்ட புயல் காற்றுக் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இறக்கி எரிபொருளை நிரப்பியுள்ளது. அங்குவைத்து தான் இந்திய விமானப்படையின் கண்ணிற்கு பட்டுள்ளது இவ்விமானம். பின்னர் மும்பையில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டது.
நான் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படுவதற்கான வாய்ப்பு நிலவும் சூழலில் இந்த உண்மையை வெளியிடுகிறேன். நான் ஒரு பயங்கரவாதி அல்ல. கம்யூனிஸ்ட் அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களை காப்பாற்றவே நான் இதனை செய்தேன்.
15 ஆண்டுகளாக நான் எவரிடம் கூறாத செய்திகள் தாம் இவை. தற்போது எனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெறும் வேளையில் என்னால் இந்த உண்மைகளை மறைக்க முடியவில்லை. மே.வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் பல வருடங்களாக தொடரும் கொலைகள், பாலியல் வன்புணர்வு ஆகியவற்றிலிருந்து மக்களை காப்பாற்றவே ஆயுதம் வழங்கினேன்.
எனது நண்பர்கள் என் முன்னால் கொல்லப்பட்டனர்.பலரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவையெல்லாம் என்னை ஆயுதங்களை புரூலியாவில் கொட்ட தூண்டியது. சித்தரவதைகளுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள எம்.பிக்கள் குடியரசு தலைவருக்கு புகார் அளித்தனர். ஒன்றும் நடக்கவில்லை.
இறுதியில் புரூலியாவில் நிரபராதிகளான மக்களை காப்பாற்ற மத்திய அரசு இத்தகையதொரு திட்டத்தை தயாரித்தது. உளவு நிறுவனங்களான ’ரா’ மூலமாக இத்திட்டத்தை மத்திய அரசு தயார் செய்தது. இதுத்தொடர்பாக ‘ரா’ மற்றும் பிரிட்டீஷ் உளவு அமைப்பான எம்.ஐ 5 உடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
திட்டம் அங்கீகரிக்கப்பட்டன. விமானம் ஆயுதங்களுடன் இந்தியாவிற்கு புறப்படும் வேளையில் யாரெல்லாம் விமானத்தில் இருக்கின்றார்கள் என்ற விபரம் வரை மத்திய அரசுக்கு தெரியும். திரிபுராவில் 1988 கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் கடத்தி போராட்டம் நடத்திய பொழுது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இங்கேயும் அதே திட்டத்தைத்தான் தீட்டினோம் இவ்வாறு கிம் டேவி கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment