போபால்:தேசத்துரோக சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென பிரபல மனித உரிமை ஆர்வலர்ம்,மருத்துவருமான பினாயக் சென் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு என குற்றஞ்சாட்டி தேசத்துரோக குற்றம் சுமத்தி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பினாயக் சென்னுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
தேசத்துரோக குற்றம் என்றால் என்ன? என்பதுக் குறித்து நமது சட்டத்தில் தெளிவாக விவரிக்கப்படவில்லை என பினாயக்சென் தெரிவித்தார். தேசத்துரோகச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டுமென மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லியும் தெரிவித்திருந்தார்.
“தரம் குறைந்த உணவும், மோசமான வாழ்க்கை சூழலும் கொண்ட சிறையில் இருப்பது கடினமாகும். எனக்கெதிரான வழக்கு முடியவில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க முயல்வேன்” என பினாயக் சென் தெரிவித்தார்.
சட்டீஷ்கர் அரசு ஒருபோதும் அங்கீகரிக்காத எனது சேவைகளுக்கான அங்கீகாரம்தான் தென்கொரியா வழங்கியுள்ள விருது என பினாயக் சென் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment