அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் போலீஸ் அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்குமிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சி.டியைக்குறித்து விசாரணை நடத்தவேண்டுமென கோரி சமர்ப்பித்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. 2002-ஆம் ஆண்டு குல்பர்க் சொசைட்டியில் நடந்த கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் இம்மனுவை சமர்ப்பித்தனர்.
எஸ்.ஐ.டி வழக்கை விசாரிப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கப் போவதாகவும் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பி.ஜெ.தந்தா தெரிவித்தார். குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை எஸ்.ஐ.டி பதிவுச்செய்துள்ளது.
ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புக்கொண்டிருந்தவர்களின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை எஸ்.ஐ.டி பதிவுச்செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் எஸ்.எம்.ஓரா வாதிட்டார்.2002-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மா தயாராக்கிய சி.டியில் குறிப்பிடப்படும் 27 நபர்களின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை பதிவுச்செய்ய எஸ்.ஐ.டிக்கு உத்தரவிடவேண்டும் என ஓரா கோரிக்கை விடுத்தார்.
இவர்களின் வாக்குமூலங்களை எஸ்.ஐ.டி பதிவுச்செய்யவேண்டுமென அவர் வலியுறுத்தினார். ஆனால் ஓராவின் வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஸி.கோடேகர் எதிர்த்தார். இதர நபர்களின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை பதிவுஸ் செய்வது இக்கட்டத்தில் முக்கியத்துவம் இல்லை என அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடிச்செய்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment