புதுடெல்லி:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக அமைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ கைது செய்துள்ளது. விசாரணையில் பங்கேற்பதற்காக சி.பி.ஐ தலைமையகத்திற்கு வருகை தந்த கல்மாடியை முறைப்படி சி.பி.ஐ கைது செய்தது.
2009- ஆம் ஆண்டு காமன்வெல்த் ஜோதி ஓட்டம் தொடர்பாக லண்டனில் நடத்திய விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்.
எ.எம்.ஃபிலிம்ஸ்,எ.எம்.கார்,வான் ஹயர் ஆகிய நிறுவனங்களுக்கு பெருந்தொகைக்கு ஒப்பந்தம் அனுமதித்தார் என்பது கல்மாடி மீதான வழக்காகும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்கை படு நிதானமாக விசாரித்துவரும் சி.பி.ஐ காலந்தாழ்ந்து கல்மாடியை கைது செய்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment