காபூல்: ஆப்கானிஸ்தான் காந்தஹாரில் 500 தாலிபான் போராளிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை தாலிபான் செய்தித் தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.
ஆனால், 476 பேர் சிறையிலிருந்து தப்பியதாக சிறை இயக்குநர் குலாம் தஸ்திர் மாயார் அறிவித்துள்ளார். சிறைக்குள்ளாக 360 மீட்டர் சுரங்கப் பாதையை உருவாக்கி இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை கைதிகள் சிறையிலிருந்து தப்பியுள்ளனர். தப்பியவர்களில் 106 பேர் தாலிபான் கமாண்டர்கள் இதர நபர்கள் சாதாரண போராளிகளாவர்.
0 கருத்துரைகள்:
Post a Comment