புதுடெல்லி: டெல்லி , மும்பை விமானநிலையங்களில் வளர்ச்சித் திட்டத்தின் பெயரால் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கன்ஸ்யூமர் ஆன்லைன் ஃபவுண்டேசன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
முன்னர் விமான நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தான் நீதிபதிகளான ஸிரியக் ஜோஷப், எ.கெ.பட்நாயக் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்துள்ளது.
டெல்லி விமானநிலையத்தில் உள்நாட்டு பயணிகளிடம் ரூபாய் 200, வெளிநாட்டுக்கு செல்வோரிடம் ரூபாய் 1300 வசூலிக்கப்பட்டுவந்தது.மும்பை விமானநிலையத்தில் ரூ.100 உள்நாட்டு பயணிகளிடமும், ரூ.600 வெளிநாட்டுக்கு செல்வோரிடமும் வசூலிக்கப்பட்டுவந்தன.
தனியார் நிறுவனங்களான டெல்லி இண்டர்நேசனல் ஏர்போர்ட் லிமிட்டட், மும்பை இண்டர்நேசனல் ஏர்போர்ட் லிமிட்டட் ஆகியன பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலித்துவருகின்றன. இவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment