வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அந்நாட்டின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜூலை மாதம் ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ்பெறுவது துவங்கும் என முன்பு அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதன் முன்னோடியாக அமெரிக்க காங்கிரஸிற்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை சமர்ப்பித்த அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் ஏழு பகுதிகளின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் படையிடம் ஒப்படைக்கப்படும். திடீரென தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய ஸ்திரமற்ற நிலைதான் ஆப்கானில் தற்போது நிலவுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.
ஆறுமாதத்திற்கிடையே அமெரிக்க-ஆப்கான் ராணுவத்தினரால் போராளிகளுக்கெதிராக வலுவான நடவடிக்கை மேற்கொள்ள சாதித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு பொறுப்பை ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைப்போம் என அமெரிக்கா அறிவித்த பிறகு நாட்டில் ராணுவத்தின் மீதான தாக்குதல் அதிகரித்து ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment