Wednesday, April 27, 2011

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வலியுறுத்துகிறார் நிதின் கட்காரி

gadkari
அயோத்தி:பாரதிய ஜனதாதள கட்சியில் தலைமைத்துவம் ஏற்று முதல் முறையாக அயோத்தியை காண சென்ற கட்காரி ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றும், இதில் எந்த வித அரசியல் இடையூறோ அல்லது தேர்தல் இடையூறோ இல்லை என்றும், கோவிலை திரும்பக் கட்டுவதால் பல கோடி மக்களின் நம்பிக்கை திரும்ப கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார். அதற்கு நீதித்துறையும் அனுமதி அளித்துள்ளது.

அவருடன் சென்ற மற்ற சில தலைவர்கள், அயோத்தியில் உள்ள அந்த இடமானது சற்று விவகாரமானது என்றும், ராமர் கோவிலை கட்ட முடிவு எடுத்தால், பஞ்சகோசி பரிக்ரமா பகுதியின் வெளிப்புறத்தில் முஸ்லிம்களின் மசூதியை கட்டவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

ரமார் கோவிலைக் கட்டும் இந்த முடிவானது பைஜாபாத் கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தால் எடுக்கப்பட்டது என்றும், இதில் எந்தவித அரசியல் நோக்கும் இல்லை என்றும்  கட்காரி தெரிவித்தார்.

கட்காரியுடன், பாரதிய ஜனதாவின் மற்ற தலைவர்களான உத்திர பிரதேச தேர்தல் அமைப்பின் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, தேசிய துணை தலைவர் வினை கடியார், பாரதிய ஜனதாவின் உத்திர பிரதேச தலைவர் சூர்யா பிரதாப் சஹி மற்றும் அப்பகுதியின் எம்.எல்.எ லாலு சிங் ஆகியோரும் அயோத்தியை பார்வையிட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza