கட்ஸ்:குஜராத் கலவரத்தின் போது கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், முஸ்லிம்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து தொலை பேசி வந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழுவிடம் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். பிரதீப் சர்மாவின் புகார் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் இப்போது நில ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளார்.
இவரது சகோதரர் குல்தீப் சர்மா ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது அஹமதாபாத்தில் காவல்துறை ஐ.ஜி.யாக குல்தீப் சர்மா இருந்தார். அப்போது முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து, ஒரு அதிகாரி என்னை போனில் தொடர்பு கொண்டார். கலவரம் நடக்கும் சமயத்தில் அஹமதாபாத்தில் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என, என் சகோதரரிடம் தெரிவிக்கும்படி அவர் கூறினார்.
இச்செய்தியை சிறையிலிருந்து கடித்தின் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அவர் எழுத்துவடிவில் தெரிவித்திருக்கிறார். முதல்வர் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் செய்த அதிகாரி யார் என்பதை, சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவிக்க தயாராக உள்ளேன் என்றும் கடிதத்தில் பிரதீப் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் சஞ்சய் பட், தான் சிறப்பு புலனாய்வு குழுவிடம் கூறியது மோடி அரசுக்கு கசிந்ததால் தனக்கு அச்சுறுத்தல் வருவதாக கூறினார்.மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்ட சோராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்தவரும் சுல்தீபே ஆவார்.
0 கருத்துரைகள்:
Post a Comment