Saturday, December 17, 2011

நெதர்லாந்து:கத்தோலிக்க நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு பாலியல் கொடுமை – கமிஷன் அறிக்கை

ஆம்ஸ்டர்டாம்:நெதர்லாந்தில் கத்தோலிக்க நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் ரீதியாக கொடுமைச் செய்யப்படுவதாக சுதந்திர கமிஷனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1945-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடம் மற்றும் அநாதை நிலையங்களில் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இக்கொடுமையை தடுக்க கத்தோலிக்க சபை தலைமையினால் முடியவில்லை என அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

Thursday, December 8, 2011

மக்கா மஸ்ஜித்:அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு

imagesCAM7ZRF1

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநீதியாக சிறையிலடைக்கப்பட்டு போலீஸின் கொடுமைக்கு ஆளான முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆந்திரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 70 இளைஞர்கள் நிரபராதிகள் என்பது நிரூபணமானதால் இழப்பீடு வழங்க முடிவுச் செய்ததாக ஆந்திரபிரதேச மாநில அரசு கூறியுள்ளது.

நரோடா பாட்டியா:உயர் போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

naroda

அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது நடந்த நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் தொடர்புடைய நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு(எஸ்.ஐ.டி) உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சமர்ப்பித்த தொலைபேசி உரையாடல்களின் ஆவணங்களின் அடிப்படையில் நீதியின் விசாலமான விருப்பத்தை
முன்னிறுத்தி அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் விளக்கமளித்தது.

அநீதமான கைது:இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

af

புதுடெல்லி:அநியாயமாக கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு மத்திய பிரதேச அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜபல்பூரைச் சார்ந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஹர்தீஃப் சிங்கிற்கு 20 வருடங்களுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் ஜபல்பூர் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற ஹர்தீஃப் சிங்கின் கோரிக்கையை நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இஸ்லாமிய வங்கியல்: ஏற்றுக்கொள்ள மறுக்கும் அணுகுமுறையை இந்தியா மாற்றவேண்டும் – முதஸ்ஸிர் சித்தீகி

 

புதுடெல்லி:இஸ்லாமிய நிதி நிறுவனங்களை ஒப்புக்கொள்ள மறுக்கும் அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும் என பிரபல பொருளாதார நிபுணர் முதஸ்ஸிர் சித்தீகி கூறியுள்ளார்.

ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களில் இஸ்லாமிய வங்கிக் குறித்த ஆலோசகராக சித்தீகி செயல்படுகிறார். இஸ்லாமிய வங்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என நீதிமன்றமே தெரிவித்த நிலையில் ரிசர்வ வங்கி மட்டுமே இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இயலும் என அவர் கூறினார்.

எகிப்து:பிரதமருக்கு கூடுதல் அதிகாரம்

ganzori
கெய்ரோ:எகிப்தின் தற்காலிக பிரதமரான கமால் அல் கன்சூரிக்கு அதிபரின் அதிகாரத்தை வழங்கி அந்நாட்டு ஆளும் ராணுவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ராணுவம் மற்றும் நீதிபீடத்தின் கட்டுப்பாடு ராணுவ கவுன்சில் வசமே இருக்கும். சிவிலியன் அரசிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராணுவம் அதிகாரத்தை ஒப்படைக்கக்கோரி போலீசும், பொதுமக்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனைத் தொடர்ந்து கன்சூரியை பிரதமராக ராணுவ கவுன்சில் நியமித்தது.

மாரடைப்பு:சர்தாரிக்கு துபாய் மருத்துவமனையில் சிகிட்சை

zardari
துபாய்:மாரடைப்பை தொடர்ந்து பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி துபாய் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னரே நிச்சயித்த பரிசோதனைக்காக சர்தாரியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக

அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லாஹ் பாபர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்ப்பாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்து போராட்டம்

t1larg_oct5_wallstreet

வாஷிங்டன்:வேலையில்லா திண்டாட்டம், அரசு புறக்கணிப்பு ஆகியவற்றை கண்டித்து அமெரிக்காவில் எதிர்ப்பாளர்கள் அமெரிக்க காங்கிரசின் மாநாட்டு திடலான வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

ஏராளமான காங்கிரஸ்(அமெரிக்க பாராளுமன்றம்) உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு தடை ஏற்படுத்திய எதிர்ப்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஆஃப்கன் தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசை எதிர்கொள்வோம் – கர்சாய் உறுதி

காபூல்:ஆஃப்கனில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ ஜாங்வி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அல்கொய்தா, தலிபான் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அச்செய்தி வெளிவந்துள்ளது.

கண்ணிவெடி:இதற்கிடையே, ஆஃப்கனில் நேற்று கண்ணி வெடி வெடித்து 19 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணம் லஷ்கர் கா என்ற இடத்திலிருந்து ஒரு பிரிவினர் சங்கின் நகருக்கு நேற்று வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்தது. இதில் வேனில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உட்பட 19 பேர் பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

Wednesday, December 7, 2011

இரட்டை குண்டுவெடிப்பு: ஆப்கானிஸ்தானில் 60 பேர் மரணம்

AFGHAN-articleLarge

காபூல்:ஷியா முஸ்லிம்களை குறிவைத்து ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் ஷியா முஸ்லிம்களின் புண்ணிய ஸ்தலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 56 பேரும், வடக்கு நகரமான மஸாரே ஷெரீஃபில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேரும் மரணமடைந்தனர்.

கஷ்மீரில் முஹர்ரம் ஊர்வலத்திற்கு தடை: உ.பியிலும், பீகாரிலும் மோதல்

05_TH_CURFEW_855563f
ஸ்ரீநகர்:கஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் நடத்தும் முஹர்ரம் ஊர்வலத்திற்கு அரசு தடைவிதித்தது. முஹர்ரம் ஊர்வலத்தை தடுப்பதற்காக ஸ்ரீநகரின் பல பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.

நகரத்தின் வர்த்தக பகுதியான லால் சவுக்கில் அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நடந்து செல்வோருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. லால் சவுக், மெளலானா ஆஸாத் சாலை, ரெசிடன்சி சாலை ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும், வியாபார நிறுவனங்களும் மூடிக் கிடந்தன. நதியில் படகு மூலமாக மக்கள் லால்சவுக்கில் வருவதை தடுக்க மத்திய படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நேற்று முன் தினம் ஜஹாங்கீர் சவுக்கில் முஹர்ரம் ஊர்வலத்தை போலீஸ் தடுத்ததை தொடர்ந்து நடந்த மோதலில் போலீஸார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும்: பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா

Babri Masjid jandar mandar Protest

புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலால் இடிக்கப்பட்டு 19-வது ஆண்டும் நினைவு தினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து உரைநிகழ்த்தினார் அவர்.

லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பஸ்வான் வலியுறுத்தல்

imagesCAH89G6W
புது டெல்லி:லஞ்ச ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவிலும் அதன் குழுமத்திலும் பின் தங்கிய வகுப்பினர் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என ராம் விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tuesday, December 6, 2011

பாப்ரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் கோரிக்கை

Flag
சென்னை:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு19 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாப்ரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம்களின் இறை இல்லமான பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார மதவெறியர்களால் தகர்க்கப்பட்டு இன்றோடு19 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை.

பாப்ரி மஸ்ஜித் நினைவு தினம்: தமிழகத்தில் கண்டன போராட்டம் மற்றும் கருத்தரங்குகள்

bb
சென்னை:1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் முஸ்லிம்களின் இறையில்லமும், இந்தியாவின் வரலாற்று சின்னமுமான பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார ஹிந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளால் இடித்துத்தள்ளப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் முஸ்லிம்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை.மேலும் இந்த பயங்கரவாத செயலை புரிந்தவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றனர். நீதி மறுக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் மேலும் மேலும் அநீதிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் சார்பாக கண்டன நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

ஜந்தர் மந்தரில் இன்று பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்

369141_100002113016683_975264635_n
புதுடெல்லி:ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19-வது ஆண்டு நினைவு தினமான இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாசிச எதிர்ப்பு தினத்தை கடைப்பிடிக்கிறது.

பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்களை வெளிச்சம் போட்டு காட்டும் லிபர்ஹான் கமிஷன் 2 வருடங்கள் தாண்டிய பிறகும் அதன் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான துணிச்சலை காட்டாத மத்திய அரசுக்கு எதிராகவும், பாப்ரி மஸ்ஜித் நிலத்தை மூன்றாக பங்கீடு செய்து தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதியை குறித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.

மூன்றாம் உலக போரே வந்தாலும் சீனா ஈரானை பாதுகாக்கும்

imagesCA5QJE7Z
பெய்ஜிங் ஈரானை பாதுகாப்பதற்காக மூன்றாம் உலகப் போரே உருவானாலும் சீனா ஈரானுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கும் என மேஜர் ஜெனரல் ஜாங் ஜாவொஜாங் கூறினார்.

தெஹ்ரான் அணு ஆயுத சோதனையை காரணம் காட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், தொடர்ந்து ஈரானை அச்சுறுத்தி வந்தபோது அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் அனுமதி இருப்பதை சுட்டி காட்டி ஈரான் அதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத ஒழிப்பில் போலீசுடன் இணைந்து செயல்படும் லண்டன் முஸ்லிம்கள்

கைரோ:வோர்செஸ்டரில் போலீசுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதற்கும் சிறுபான்மையினருடன் காவல்துறைக்கு உடனான உறவை வலுபடுத்தவும் பயிற்சி அளிக்க முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வோர்செஸ்டர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

வோர்செஸ்டர் கல்லூரியில் பயிலும் 17  வயதையுடைய ஷபாஸ் அலி என்னும் இளைஞர் கூறியதாவது; பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் நான்தான் மிகவும் குறைந்த வயதையுடையவர் என்றும் அனைவரது கருத்துக்களையும் கேட்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் கூறினார். கில்ட்ஹாலில் நடந்த பயிற்சியில் இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருடன் மேற்கு மெர்சியா போலிசும் வோர்செஸ்டர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவும் கலந்து கொண்டனர். இதுவே நகரில் முதன்முறையாக நடந்த பயிற்சி நிகழ்ச்சியாகும்.

என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி!

let we forgot
பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!

ஹிந்துத்துவ கயவர்கள் 1992 டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜிதைச் சுற்றி குழுமியிருந்த பொழுது எப்படியும் நம்துனை இராணுவம் மஸ்ஜிதைக் காப்பாற்றிவிடும் என்ற நப்பாசை நம் இதயத்தில் ஓடியது. ஒவ்வொரு கற்களாக பாபரி தகர்க்கப்பட்ட பொழுது நம் நப்பாசையும் தகர்ந்து தரைமட்டமானது.

“மீண்டும்அதே இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டித் தரப்படும்” என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் நானிலம் அறிய வாக்களித்த பொழுது மீண்டும் முஸ்லிம்களுக்கு நப்பாசை தொற்றிக்கொண்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அந்த நப்பாசையிலும் மண்ணை அள்ளிப் போட்டன.

இந்த நம்பிக்கைத் துரோகம் 1992ல் தொடங்கியதல்ல. மாறாக, என்று பாபரி மஸ்ஜிதின் மிம்பரில் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டதோ அந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவிலிருந்து இந்த நம்பிக்கைத் துரோகம் தொடங்குகிறது.

மார்க்கத்தின் மார்பிடத்தில் இணைவைப்பின் இழிவுச் சின்னத்தைக் கண்டபொழுது முஸ்லிம்களின் இதயங்களில் இடி விழுந்தது.

முஸ்லிம்கள் அதனைத் தூக்கியெறிந்து விட்டு இறை வணக்கங்களைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் நீதிக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கே அநீதி இழைக்கப்பட்டது. சிலையை அகற்றுவதற்குப் பதில் சீல் வைக்கப்பட்டது மஸ்ஜித். கண்ணியத்திற்குரிய இறையில்லத்தை “இது சர்ச்சைக்குரிய இடம்” என்று நீதிமன்றம் சொன்னது.

ராம்சந்தர் தாஸ் பரமஹம்ஸ் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி  “நான்தான் மஸ்ஜிதினுள் சிலையை வைத்தேன்” என்று பகிரங்கமாகக் கூறியபொழுது அவன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு அதிகாரிகள், 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த புனிதமான இறை வணக்கங்களை அங்கே நிறுத்தினார்கள்.

1984-ம் ஆண்டு அக்டோபரில் ராமஜென்ம பூமியை விடுவிக்கப் போவதாகக் கூறி ஹிந்துத்துவ வி.ஹெச்.பி.யின் பயங்கரவாதிகள் ஊர்வலம் நடத்தினர். அப்போது “ராமர் கோயிலைக் கட்ட வேண்டும்” என்று அராஜகமாக அறிவிக்கப்பட்டது. எல்.கே. அத்வானியின் தலைமையில் ‘ராமர் கோயில் இயக்கம்’ ஒன்றும் துவங்கப்பட்டது.

1986ம் ஆண்டு பிப்ரவரியில் ஃபைஸாபாத் நீதிமன்றம் பாபரி மஸ்ஜிதை ஹிந்துக்களுக்கு மட்டும் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. ஆட்சேபணை செய்த முஸ்லிம்கள் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள்.

1987-ம் ஆண்டு ஜனவரி முதல் “இராமாயணம்” என்ற தொலைக்காட்சித் தொடர் இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இது மக்களிடையே ராமர் மீது அதிகப்படியான பக்தியை உண்டாக்க உதவியது. இது ராமர் இயக்கத்திற்கு மேலும் வலுவைத் தந்தது.

1989ம் ஆண்டு செப்டம்பரில் ஹிந்துத்துவ பயங்கரவாத வி.ஹெச்.பி.யினர் நாடு முழுவதும் “ராம் சிலா” பூஜையை நடத்தி, ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று மக்கள் ஆதரவை – முக்கியமாக இந்துக்கள் ஆதரவைத் தேடினர்.

1990 நவம்பரில் எல்.கே.அத்வானி தனது ர(த்)த யாத்திரையைத் துவங்கினார். சோம்நாத்திலிருந்து அயோத்தியை நோக்கிச் சென்று வழிநெடுகிலும் இந்துக்களின் ஆதரவைப் பெறத் திட்டமிட்ட அத்வானியின் ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் முஸ்லிம்களின் ரத்தம் ஓட்டப்பட்டது.
இந்த நம்பிக்கைத் துரோகத்தின் உச்சகட்டம்தான் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பல வருடங்களுக்குப் பிறகு அளித்த தீர்ப்பு. அந்த நிலத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து ஒரு பங்கை மட்டும் முஸ்லிம்களுக்குக் கொடுக்கவேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு நீதி செத்துவிட்டதையே பறைசாற்றியது. முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

இப்படி ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸும், அதன் துணை அமைப்புகளும் பாபரி மஸ்ஜிதைத் தகர்ப்பதில் கவனமாகத் திட்டமிட்டு, மிகவும் கச்சிதமாக நடந்து கொண்டன.மேலும் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தையும், அதனைச் சுற்றியுள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து அங்கே ஓர் இராமர் கோயிலைக் கட்டவேண்டும் என்ற திட்டத்தினை செயல்படுத்துவதில் அவைகடும் முயற்சியில் இறங்கின. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக “இராமர் கோயிலைக் கட்டுவதற்காக பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுத்துவிடலாம்” என்றொரு மனநிலையை அவை பொதுமக்களிடம் உருவாக்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.

இந்த மனநிலை மாற்றம் முஸ்லிம்களில் சிலருக்கு வந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அவர்கள் பாபரி மஸ்ஜித் பிரச்னையை வெறும் கட்டடத் தகர்ப்புப் பிரச்னையாகப் பார்க்கின்றார்கள். அது முஸ்லிம்களின் வழிபாட்டுச் சின்னம் என்று அவர்கள் பார்க்கவில்லை. அது முஸ்லிம்களின் அடையாளம் என்று அவர்கள் பார்க்கவில்லை. அது முஸ்லிம்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்று அவர்கள் பார்க்கவில்லை. இந்த மஸ்ஜிதோடு இது நிற்கப்போவதில்லை, 3000 மஸ்ஜிதைக் காவு கொண்டாலும் இது நிற்கப் போவதில்லை என்று அவர்கள் பார்க்கவில்லை. இந்தப் பிரச்னைக்குப் பின்னணியிலுள்ள நீண்டகால சதித்திட்டத்தின் ஒரு கருவிதான் பாபரி மஸ்ஜித் என்று அவர்கள் பார்க்கவில்லை.

1949ம் ஆண்டு நடந்த நிகழ்வுகளில் மஸ்ஜித் மட்டும் அல்ல பிரச்னை. அயோத்தியாவில்ஒரு முஸ்லிம்கூட வசிக்கக் கூடாது, முஸ்லிம்களின் உடல்கள் அங்கே அடக்கம் செய்யப்படக் கூடாது, முஸ்லிம்களின் கடைகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று பல விஷயங்களை ஆர்.எஸ்.எஸ். அங்கே அமுல்படுத்த முயன்றது. இதற்கு ஆளும் வர்க்கத்தில் இருந்த வல்லபாய் படேல், கே.கே.கே. நாயர் போன்றவர்களும் முழு உடந்தையாக இருந்தனர்.

ஹிந்துத்துவ சங்கப் பரிவாரங்களுக்கு பாபரி மஸ்ஜித் மட்டும் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்கள்தான் அவர்களுக்குப் பிரச்னை.அயோத்தியாவை ஒர் இந்து ராஷ்டிரத்தின் சோதனைக் களமாகமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள். முஸ்லிம்களின் மனதிலிருந்து பாபரி மஸ்ஜிதை எடுத்துவிட்டால் ஆர்.எஸ்.எஸ். தனது இந்து ராஷ்டிரத்தின் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டதாக நம்புகின்றது. அதற்கு அரசும், ஊடகங்களும் துணை போகின்றன.

நாம் கேட்பது கோயில் நிலத்தை அல்ல. மாறாக 483 ஆண்டு காலமாக நமது சொத்தாக இருந்து வந்திருக்கும் நம் நிலத்தைத்தான் கேட்கின்றோம். “அதே இடத்தில் மீண்டும் பாபரி மஸ்ஜித் கட்டித் தரப்படும்” என்று முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் கேட்கின்றோம். அதனைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் அங்கே நிம்மதியாக வாழத்தான் கேட்கின்றோம். நாம் இல்லையென்றால் நம் சந்ததிகள் அங்கே தொழ வேண்டும்.

இதற்காக மக்களை ஒன்று திரட்டுவோம். நம் தரப்பு நியாயத்தை மக்கள் மன்றம் முன் எடுத்துவைப்போம். நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை, நியாயத்திற்காக போராடுபவர்களை ஓரணியில் ஒருங்கிணைப்போம். இதனைப் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாற்றுவோம். இன்ஷா அல்லாஹ் பாபரி மஸ்ஜிதை மீட்டெடுப்போம்.

Monday, December 5, 2011

இஸ்லாமியவாதிகளின் வெற்றி அரபு வசந்தத்தின் தொடர்ச்சி – ஷேக் யூசுஃப் அல் கர்தாவி

imagesCAQM73AF

தோஹா:பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய கட்சிகள் தேர்தல்களில் பெற்றுவரும் வெற்றி அரபு வசந்தத்தின் தொடர்ச்சி என சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவர் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி கூறியுள்ளார்.

இதுக்குறித்து கத்தார் உமர் கத்தாப் மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆ உரையில் கர்தாவி கூறியதாவது: துனீசியாவிலும், எகிப்திலும் இஸ்லாமியவாதிகள் பெற்ற வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது. இஸ்லாத்தின் அடிப்படையை பற்றிப்பிடித்துக் கொண்டு முற்போக்கு இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

பாப்ரி:அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

untitled
அயோத்தி:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு நாளை 19-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அயோத்தி மற்றும் ஃபைஸாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட டிசம்பர் 6-ஆம் தினமான நாளை முஹர்ரம் 10-வது தினமாகும். இந்த சூழலில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி ஆர்.கே.சதுர்வேதி கூறியுள்ளார்.

பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, வழக்கை விரைந்து முடிக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை

tehlan baqqawi

சென்னை:பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாபரி மஸ்ஜித் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில்; “டிசம்பர் 6,1992 இதே, நாளில் இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர்.அம்பேத்கர் நினைவு  நாளில் அயோத்தியில் “பாபரி மஸ்ஜித்” பாஸிச சங்பரிவாரக் கும்பலால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. கோடிக்கணக்ககான மக்களின் இதயங்கள் சுக்கு நூறாக இடிந்து போனது.

Sunday, December 4, 2011

2ஜி வழக்கில் ஜாமீன் பெற்ற கனிமொழி சென்னை திரும்பினார்

kanimozhi-reaches-chennai-295

சென்னை:2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார் கனிமொழி. டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர்.

29-ம் இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார்.

எகிப்து:வாக்குப் பதிவில் சாதனை

vote
கெய்ரோ:எகிப்து பாராளுமன்றத்திற்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் வாக்குபதிவு சாதனை படைத்துள்ளது. 62 சதவீதம் பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தலைவர் அப்துல் முஈஸ் இப்ராஹீம் அறிவித்துள்ளார்.

நவீன எகிப்தில் முதல் தடவையாக இவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கீழ் சபைக்கு முதல் கட்ட தேர்தல் நடந்த கடந்த திங்கள் கிழமை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது வாக்குகளை பதிவுச் செய்துள்ளனர். அடுத்த இரண்டு கட்ட தேர்தல்கள் இம்மாதமும், அடுத்த ஜனவரியிலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முழுமையான முடிவுகள் வெளியாகும்.

மேற்காசிய நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் – அமெரிக்கா

வாஷிங்டன்:மேற்காசியாவில் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வரும் இஸ்ரேல் பிராந்தியத்தில் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டா அறிவுறுத்தியுள்ளார்.

ஃபலஸ்தீன், துருக்கி, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் தயாராக வேண்டும்.

டெல்லி ஸ்ரீராமசேனா நடத்திய தாக்குதல்களில் ராகுல் ஈஸ்வருக்கு பங்கு: டெல்லி உளவுத்துறை

imagesCA49R4DH
புதுடெல்லி:டெல்லியில் ஸ்ரீராமசேனா, பகத்சிங் க்ராந்தி சேனா போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதல்களின் சதித் திட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் கேரளாவைச் சார்ந்த சபரிமலை தந்திரி(முதன்மை சாமியார்)யின் பேரனான ராகுல் ஈஸ்வருக்கு பங்கிருப்ப்பதாக டெல்லி போலீஸின் உளவுத்துறை பிரிவு அறிக்கை அளித்துள்ளது.

பகத்சிங் க்ராந்தி சேனா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு கடந்த நவம்பர் 25-ஆம் தேதி டெல்லியில் நடத்திய ரகசிய கூட்டத்தில் ராகுல் ஈஸ்வர் பங்கேற்றுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜே டே கொலை:குற்றப்பத்திரிகை தாக்கல்

jede

மும்பை:பத்திரிகையாளர் ஜோதிர்மயி டேயின் கொலை வழக்கில் மும்பை போலீஸ் மோக்கா (மஹராஷ்ட்ரா ஒருங்கமைவு குற்றம் தடை சட்டம்) நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.

நிழலுக தாதா சோட்டாராஜன் உள்பட 12 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகள் ஆவர். ஆனால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள ஏசியன் ஏஜ் பத்திரிகையின் டெபுட்டி பீரோ சீஃப் ஜிக்னா வோராவின் பெயர் 3055 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. வோராவின் பங்கினை விவரிக்கும் துணை குற்றப் பத்திரிகை பின்னர் தாக்கல் செய்யப்படும் என போலீஸ் கூறியுள்ளது.

அந்நிய முதலீடு:தீர்மானத்தை வாபஸ்பெற்று பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கோரிக்கை

e.abubacker

புதுடெல்லி:சில்லறை வியாபாரத் துறைகளில் அந்நிய முதலீடு தீர்மானத்தை வாபஸ்பெற்று பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முல்லைப் பெரியாறு:பேச்சு வார்த்தையில் பங்கேற்க தமிழக அரசு மறுப்பு

Mullaperiyar-Dam

சென்னை:முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக டெல்லியில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற திங்கள் கிழமை(டிசம்பர் 5) அன்று தமிழக-கேரள அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிகாரப்பூர்வமற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதனை தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி அறிவித்துள்ளார்.

Saturday, December 3, 2011

வருகிறது முஸ்லிம் ஃபேஸ்புக்!

salam world
இஸ்தான்புல்:ஃபேஸ்புக்கின் மாதிரியில் முஸ்லிம் இளைஞர்களுக்காக சமூக இணையதளம் ஒன்று துவங்கவிருக்கிறது.

ஸலாம்வேர்ல்ட்.காம் என்ற பெயரிலான இணையதளம் அடுத்த வருடம் துவங்கும். முஸ்லிம் தொழிலதிபர்கள் சிலர் இத்திட்டத்தை துவக்க உள்ளனர். இளைஞர்களிடையே பொதுவான பார்வை மற்றும் இஸ்லாத்தின் விழுமியங்களை பரப்புரை செய்வதற்கு இந்த இணையதளத்தை துவங்க உள்ளதாக இதன் நிறுவனர்களில் ஒருவரான அஹ்மத் அஸிமோவ் தெரிவித்துள்ளார்.

போபால் விஷவாயு விபத்து:27 ஆண்டுகள் நிறைவு

Bhopal-Gas-Tragedy1
போபால்:போபாலில் விஷவாயு விபத்து நிகழ்ந்து 27 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. ஆனால் இந்த துயர சம்பவத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதில் அரசிடம் முறையான விபரம் இல்லை.

1984-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவில் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மீதைல் ஐஸோஸைநேட் வாயு கசிய துவங்கியது. அடுத்த தினமும் வாயு கசிய துவங்கியவுடன் உலகம் கண்ட மிகப்பெரும் விபத்து நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் விஷவாயுவை சுவாசித்து மரணித்தனர். அதனை விட அதிகமானோர் நிரந்தர நோயாளிகளாக மாறினர்.

புஷ்ஷை கைது செய்ய ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை

wanted

லண்டன்:மனித உரிமை மீறல்களை நடத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷை கைதுச்செய்ய ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, தான்சானியா, ஜாம்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கோரிக்கை விடுத்துள்ளது.

புஷ் இம்மாதம் அந்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகையில் கைது செய்யவேண்டும் என ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக புஷ் பதவி வகித்த வேளையில் மனித உரிமை மீறல்களுக்கு தலைமை வகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் இக்கோரிக்கையை ஆம்னஸ்டி விடுத்துள்ளது.

நேட்டோ தாக்கினால் பதிலடி கொடுக்க பாக்.ராணுவத்தினருக்கு உத்தரவு

gayani
இஸ்லாமாபாத்:எதிர்காலத்தில் நேட்டோ தாக்குதல் நடந்தால் பலமாக பதிலடிக் கொடுக்க பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்ஃபாக் கயானி ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் ராணுவம் எவருடைய அனுமதியையும் பெற தேவையில்லை என்றும், முழுமையான அதிகாரத்தையும் வழங்குவதாகவும் கயானி தெரிவித்துள்ளார்.

வடமேற்கு பாகிஸ்தானில் ராணுவ செக்போஸ்டில் நேட்டோ ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 ராணுவத்தினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கயானி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முல்லைப் பெரியார்:நீர்மட்டம் உயர்வதற்கும் பாதுகாப்பிற்கும் சம்பந்தமில்லை – கேரள அட்வக்கெட் ஜெனரல்

mullaperiyar

கொச்சி:’முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று கேரள உயர் நீதிமன்றத்தில் இம்மாநில அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் இருப்பதால், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளன. இதை விசாரித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது பற்றி விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

வெறுப்பை தூண்டும் உரை: வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

imagesCAL9M6V5
புதுடெல்லி:2009-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது வெறுப்பை தூண்டும் வகையில் துவேசமாக பேசிய பா.ஜ.க எம்.பி வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெறுப்பை தூண்டு உரை நிகழ்த்திய வருண்காந்தியின் எம்.பி பதவியை ரத்துச் செய்யவேண்டும் என கோரி ஃபிலிபித் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வி.எம்.சிங் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: எஸ்.ஐ.டிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

naroda masscare
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு  குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது நிகழ்ந்த நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் பங்கினைக் குறித்து மேலும் விசாரிக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனு மீதான விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் குஜராத் டி.ஜி.பி பி.சி பாண்டே உள்பட 4 உயர் போலீஸ் அதிகாரிகளை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. நோட்டீஸிற்கான பதிலை இம்மாதம் ஏழாம் தேதிக்குள் அளிக்கவேண்டும் என சிறப்பு நீதிபதி ஜோல்ஸனா யக்னிக் எஸ்.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Friday, December 2, 2011

பழங்குடியின பெண்கள் பாலியல் பலாத்காரம் – தவறு செய்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை -SDPI

sdpi
சென்னை:திருகோவிலூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தவறு செய்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என SDPI-யின்  மாநில  பொதுச் செயலாளர்  B.ஹப்துல் ஹமீது இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த ஊடகங்கள்

6429014957_7fe2f73f29
பாட்னா:பீகார் மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் அப்பகுதி காவல்துறையினரின் உதவியோடு  கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்று ஒரு சில பத்திரிக்கைகளும், டெல்லி, ஜும்மா மஸ்ஜித் மற்றும் பெங்களூர் கிருஷ்ண சாமி மைதானத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள்  என்று சில பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளது. மதுபானி மாவட்ட காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஜமாலி என்ற இளைஞர் வைக்கப்பட்டுள்ளார். இவர் மதரஸா பயிலும் மாணவர். பக்ரீத் பண்டிகயை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது தந்தை நஸருல் ஜமால் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார். ஜமாலி தனது வீட்டில் இருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்பாலில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்

imphal
இம்பால்:கடந்த புதன் அன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் அவர்கள் வருகின்ற சனிக் கிழமையன்று புதிதாக கட்டப்பட்டுள்ள மாநில தலைமையகத்தை திறந்துவைக்க வருவதாக இருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குண்டு வெடிப்பு  மாநில தலைமையகத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளது.

இஷ்ரத்:குஜ​ராத் போலீஸை நம்ப முடியாது – சி​.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்​றம் உத்தரவு

israth fake encounter
அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் அநியாயமாக மோடியின் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியை கொலைச்செய்ய வந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் என பொய் குற்றம் சாட்டி இஷ்ரத் ஜஹான், ஜாவேத் குலாம் ஷேக், அக்பர் அலி ராணா, ஜிஸான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோரை மோடியின் போலீஸ் அநியாயமாக சுட்டுக்கொன்றது. ஆனால் இச்சம்பவம் போலி என்கவுண்டர் என முன்னர் இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் தமாங் கண்டறிந்தார்.

உலகின் மிக செல்வாக்கான முஸ்லிம்

ஜித்தா:உலகின் மிக செல்வாக்கான புகழ்பெற்ற முஸ்லிம்களுள் 500 பேர் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர், இரண்டு புனித பள்ளிவாசல்களின் பொறுப்பாளரான மன்னர் அப்துல்லா.

ஜோர்டானில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கூடத்துக்காக ராயல் சென்டரும், முஸ்லிம்- கிறித்துவர்கள் புரிந்துணர்வுக்காக இளவரசர் அல் வலீத் பின் தலால் மையமும், இணைந்து அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாக்டர்.அப்துல்லா பின் பீஹ் இந்த அறிக்கை குறித்து கூறுகையில் முஸ்லிம் உலகத்தில் நடப்பதை மேற்கத்திய மக்கள் அக்கறையுடன் கவனிக்கிறார்கள்.

Thursday, December 1, 2011

ஈரான்:தூதரக அதிகாரிகளை வாபஸ்பெற்றது பிரிட்டன்

30tehran4_cnd-articleLarge
டெஹ்ரான்:ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரிட்டன் தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்த சூழலில் ஈரானில் பிரிட்டன் தூதரக அதிகாரிகளை அந்நாடு வாபஸ் பெற்றுள்ளது.இதனை பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

துபாய்க்கு செல்வதற்காக தூதரக அதிகாரிகளின் முதல் குழு டெஹ்ரான் விமானநிலையத்திற்கு வந்துள்ளதாக ஐரோப்பிய யூனியன் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கூறுகின்றன.ஆனால், அனைத்து தூதரக அதிகாரிகளையும் பிரிட்டன் வாபஸ் பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

எகிப்து தேர்தல்:இஃவானுல் முஸ்லிமீன் முன்னணி

800_egypt_election_ballots_ap_111130

கெய்ரோ:துனீசியாவையும், மொரோக்கோவையும் பின்தொடர்ந்து எகிப்து தேர்தலிலும் இஸ்லாமிய கட்சி முன்னேறுகிறது.ஜனநாயக புரட்சியின் மூலமாக ஹுஸ்னி முபாரக் பதவி விலகியபிறகு நடந்த முதல் கட்ட தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீன்(முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்) தலைமையிலான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்.

அமித் ஷா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு கோரிக்கை

amitshahsurrender295
புதுடெல்லி:சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய உத்தரவிட்ட நீதிபதியின் நீதிதவறாமையை குறித்து கேள்வி எழுப்பியுள்ள குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆகியோர் மீது தாமாகவே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

நீதிபதியும், அரசும், சி.பி.ஐயும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக கூறும் அமித் ஷாவின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார்.

லஞ்சமாக நாகபாம்புகள்:அலுவலகத்தை விட்டு விரண்டோடிய அரசு அதிகாரிகள்

657241-cobra
பஸ்தி(உ.பி):அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் வித்தியாசமான நடவடிக்கை.பாம்பாட்டியான ஹக்குல் என்பவர் தனது கோரிக்கையை உதாசீனப்படுத்திய ரெவின்யூ அதிகாரிகளின் அணுகுமுறையில் மனம் நொந்துபோய் நாகப்பாம்புகள் உள்பட ஒரு டஜன் பாம்புகளை ரெவின்யூ அலுவலகத்தில் பையில் கொண்டு சென்று விட்டுள்ளார்.

பாம்புகள் அலுவலகத்தின் நாற்காலிகளிலும், மேஜைகளிலும் ஏறி படமெடுத்து ஆட ஆடிப்போன அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு விரண்டோடியுள்ளனர்.பாம்புகள் படமெடுத்து ஆடுவதை அலுவலகத்திற்கு வெளியே மக்கள் திரண்டு ரசித்துள்ளனர்.

ஹஸாரே ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு

kejriwal_rejectsdraft_271x181_190
புதுடெல்லி:தடை உத்தரவை மீறிய நான்கு அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவுச்செய்துள்ளனர்.லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் நெரிசல் மிகுந்த கொன்னாட் ப்ளேஸில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவுச்செய்யப்பட்டுள்ளது.

Dua For Gaza