Wednesday, December 7, 2011

பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும்: பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா

Babri Masjid jandar mandar Protest

புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலால் இடிக்கப்பட்டு 19-வது ஆண்டும் நினைவு தினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து உரைநிகழ்த்தினார் அவர்.

நீதியை நடைமுறைப்படுத்துவதற்கான தேசத்தின் வாக்குறுதியை
நிறைவேற்ற வேண்டுமானால் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும். பாப்ரி மஸ்ஜித் நிலத்தை மூன்று பங்காக பிரித்து அளிக்கும் சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்கள் மீது லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின்படி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை
தெளிவுப்படுத்த வேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தனது உரையில் வலியுறுத்தினார்.

மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்கு சட்டமியற்ற கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோருக்கு மனு அளித்தது. சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஜந்தமந்தரில் நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.

டாக்டர்.அன்வாருல் இஸ்லாம், வழக்கறிஞர் பாஹர் யுபர்கி, மெளலானா கலீமுல்லாஹ் சித்தீகி ஆகியோர் உரையாற்றினர். காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை தர்ணா போராட்டம் நடந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza