பஸ்தி(உ.பி):அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் வித்தியாசமான நடவடிக்கை.பாம்பாட்டியான ஹக்குல் என்பவர் தனது கோரிக்கையை உதாசீனப்படுத்திய ரெவின்யூ அதிகாரிகளின் அணுகுமுறையில் மனம் நொந்துபோய் நாகப்பாம்புகள் உள்பட ஒரு டஜன் பாம்புகளை ரெவின்யூ அலுவலகத்தில் பையில் கொண்டு சென்று விட்டுள்ளார்.
பாம்புகள் அலுவலகத்தின் நாற்காலிகளிலும், மேஜைகளிலும் ஏறி படமெடுத்து ஆட ஆடிப்போன அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு விரண்டோடியுள்ளனர்.பாம்புகள் படமெடுத்து ஆடுவதை அலுவலகத்திற்கு வெளியே மக்கள் திரண்டு ரசித்துள்ளனர்.
பாம்புகளை பிடித்து அதனை பாதுகாத்து வருபவர் ஹக்குல்.இவற்றை பரிபாலித்து வர தனக்கு நிலம் தேவை என குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதனைத்தொடர்ந்து இவரது கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
ஆனால், ரெவின்யூ அதிகாரிகளோ ஹக்குலிடம் நிலம் வழங்க லஞ்சம் கேட்டுள்ளனர்.இதனால் மனம் நொந்துபோன ஹக்குல் லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட பாம்புகள் கொண்டுவந்து அலுவலகத்தில் விட்டுள்ளார்.
பாம்பாட்டியான ஹக்குலின் புகார் கிடைத்துள்ளதாகவும்,அவருக்கு தாமதிக்காமல் நிலம் வழங்கப்படும் என சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் அறிவித்துள்ளார்.தனது பாம்பு தந்திரம் வெற்றிப்பெற்றதில் மகிழ்ச்சியில் உள்ளார் ஹக்குல்.
0 கருத்துரைகள்:
Post a Comment