Wednesday, December 7, 2011

லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பஸ்வான் வலியுறுத்தல்

imagesCAH89G6W
புது டெல்லி:லஞ்ச ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவிலும் அதன் குழுமத்திலும் பின் தங்கிய வகுப்பினர் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என ராம் விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து செவ்வாய் அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது; “மக்கள் விரோத ஊழலுக்கு எதிராக அமையக் கூடிய லோக்பால் சட்ட மசோதா சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும். மேலும் சிறுபான்மையினர் நிலையை மேம்படுத்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அரசு நிலையான கால அட்டவணைக்குள் செயல்படுத்தவேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza