துபாய்:மாரடைப்பை தொடர்ந்து பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி துபாய் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னரே நிச்சயித்த பரிசோதனைக்காக சர்தாரியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக
அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லாஹ் பாபர் தெரிவித்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு சர்தாரிக்கு நெஞ்சு வேதனை ஏற்பட்டதாகவும், இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் பரிசோதனைக்கு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் பாபர் கூறினார்.
சர்தாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அடிப்படையற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்தாரி தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னோடியாக மருத்துவமனையில் தங்கியுள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேட்டோ தாக்குதலும், மெமோ சர்ச்சையும் பாக்.அரசையும், சர்தாரியையும் ஒரேபோல
நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment