இஸ்லாமாபாத்:எதிர்காலத்தில் நேட்டோ தாக்குதல் நடந்தால் பலமாக பதிலடிக் கொடுக்க பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்ஃபாக் கயானி ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் ராணுவம் எவருடைய அனுமதியையும் பெற தேவையில்லை என்றும், முழுமையான அதிகாரத்தையும் வழங்குவதாகவும் கயானி தெரிவித்துள்ளார்.
வடமேற்கு பாகிஸ்தானில் ராணுவ செக்போஸ்டில் நேட்டோ ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 ராணுவத்தினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கயானி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ கமாண்டர்களில் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் அவர். நேட்டோவின்
தாக்குதல் அத்துமீறியதாகும் என வர்ணித்த கயானி தாக்குதல் தொடர்ந்தால் பதிலடி கொடுக்க காலதாமதம் தேவையில்லை என கூறினார்.
தாக்குதல் அத்துமீறியதாகும் என வர்ணித்த கயானி தாக்குதல் தொடர்ந்தால் பதிலடி கொடுக்க காலதாமதம் தேவையில்லை என கூறினார்.
நேட்டோ பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து அனுமதியை பெற்ற பிறகே தாக்குதலை நடத்தியது என பாக்.அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறுகிறது.
ஸலாலா எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் உள்ளனரா? என்பதை ஆராயமல் தாக்குதல் பாக். ராணுவம் அனுமதி அளித்தது என அப்பத்திரிகை கூறுகிறது. 24 பாக்.ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதற்கு தேவையில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அனுதாபத்தை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே.கார்ணி கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment