Thursday, December 8, 2011

எகிப்து:பிரதமருக்கு கூடுதல் அதிகாரம்

ganzori
கெய்ரோ:எகிப்தின் தற்காலிக பிரதமரான கமால் அல் கன்சூரிக்கு அதிபரின் அதிகாரத்தை வழங்கி அந்நாட்டு ஆளும் ராணுவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ராணுவம் மற்றும் நீதிபீடத்தின் கட்டுப்பாடு ராணுவ கவுன்சில் வசமே இருக்கும். சிவிலியன் அரசிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராணுவம் அதிகாரத்தை ஒப்படைக்கக்கோரி போலீசும், பொதுமக்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனைத் தொடர்ந்து கன்சூரியை பிரதமராக ராணுவ கவுன்சில் நியமித்தது.

முபாரக் பதவி விலகிய பிறகு நடந்த முதல் ஜனநாயகரீதியிலான தேர்தலில் தனிநபர்கள் தேர்தலிலும் பெரும் வெற்றிப் பெற்றுள்ளதாக இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் கட்சியான எஃப்.ஜெ.பி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

முதல் கட்ட தேர்தலில் 54 இடங்களுக்கு நடந்த தனிநபர்களுக்கான தேர்தலில் 36 இடங்களை கைப்பற்றியதாக எஃப்.ஜெ.பி அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு உடனடியாக வெளியாகும் என கருதப்படுகிறது. கட்சி இடங்களில் 36.6 சதவீத வாக்குகளை எஃப்.ஜெ.பி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza