ஜித்தா:உலகின் மிக செல்வாக்கான புகழ்பெற்ற முஸ்லிம்களுள் 500 பேர் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர், இரண்டு புனித பள்ளிவாசல்களின் பொறுப்பாளரான மன்னர் அப்துல்லா.
ஜோர்டானில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கூடத்துக்காக ராயல் சென்டரும், முஸ்லிம்- கிறித்துவர்கள் புரிந்துணர்வுக்காக இளவரசர் அல் வலீத் பின் தலால் மையமும், இணைந்து அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாக்டர்.அப்துல்லா பின் பீஹ் இந்த அறிக்கை குறித்து கூறுகையில் முஸ்லிம் உலகத்தில் நடப்பதை மேற்கத்திய மக்கள் அக்கறையுடன் கவனிக்கிறார்கள்.
இது மிகவும் உண்மையானது ஏனெனில் இது முஸ்லிம் உலகை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. மன்னர் அப்துல்லா முதலிடத்தை பிடித்திருப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த பட்டியலில் துருக்கி பிரதமர் தய்யிப் எர்டோகன், கத்தார் அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல்-தானி , ஷேக் அல்-அசார், டாக்டர். அஹ்மத் அல்-தயீப் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் உலகளாவிய சங்கத்தின் தலைவர் இஸ்லாமிய அறிஞர் டாக்டர். யூசுஃப் அல்-கரதாவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இஸ்லாமிய பணிக்காகவும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மன்னர் அப்துல்லாவை, இஸ்லாமிய அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். மன்னர் அப்துல்லா உற்று நோக்கக் கூடியவராகவும், உள்ளுணர்வு கொண்டவராகவும், முஸ்லிம் நாடுகளிடையே ஒருமைப்பாட்டை பலப்படுத்த கூடியவராகவும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment