ஆம்ஸ்டர்டாம்:நெதர்லாந்தில் கத்தோலிக்க நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் ரீதியாக கொடுமைச் செய்யப்படுவதாக சுதந்திர கமிஷனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1945-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடம் மற்றும் அநாதை நிலையங்களில் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இக்கொடுமையை தடுக்க கத்தோலிக்க சபை தலைமையினால் முடியவில்லை என அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
கிழக்கு நெதர்லாந்தில் ஒரு கத்தோலிக்க பள்ளிக்கூடம் மீது சுமத்தப்பட்ட சிறுவர் பாலியல் கொடுமை தொடர்பான புகாரை தொடர்ந்து சுதந்திர கமிஷன் விசாரணை நடத்தியது. 2010 ஆம் ஆண்டு விசாரணையை துவக்கிய கமிஷன் 1800 புகார்களை பரிசோதித்தது. இக்கொடுமையின் தீவிரத்தை அறிவதற்காக மக்களிடையே சர்வேயும் நடத்தப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment