அயோத்தி:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு நாளை 19-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அயோத்தி மற்றும் ஃபைஸாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட டிசம்பர் 6-ஆம் தினமான நாளை முஹர்ரம் 10-வது தினமாகும். இந்த சூழலில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி ஆர்.கே.சதுர்வேதி கூறியுள்ளார்.
டிவிசனல் கமிஷனர் மதுசூதனன் ரைஸாதா, டி.ஐ.ஜி ஆனந்த் ஸ்வரூப் ஆகியோர் அடங்கிய போலீஸ் அதிகாரிகள் அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment