Sunday, December 4, 2011

மேற்காசிய நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் – அமெரிக்கா

வாஷிங்டன்:மேற்காசியாவில் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வரும் இஸ்ரேல் பிராந்தியத்தில் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டா அறிவுறுத்தியுள்ளார்.

ஃபலஸ்தீன், துருக்கி, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் தயாராக வேண்டும்.

வட்டமேஜை பேச்சுவார்த்தைக்கு தயாரானால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். ஃபலஸ்தீனின் நிதிப்பணத்தை இஸ்ரேல் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களுடன் இதர ஒத்துழைப்பையும் பலப்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அனைத்து வித உதவிகளையும் அளிக்க அமெரிக்கா தயார். இஸ்ரேல் தயாராகவில்லை என்றால் பிராந்தியத்தில் அமைதி உருவாகாது என பெனட்டா இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பெனட்டாவின் அறிக்கைக்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. ஃபலஸ்தீன் மண்ணில் குடியிருப்புகளை கட்டுவதை நிறுத்தாமல் தொடரும் இஸ்ரேலின் நடவடிக்கை பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ளது.

ஃபலஸ்தீன் மக்களுக்காக நிவாரணப் பொருட்களை கொண்டுவந்த துருக்கி கப்பல் மீது அநியாயமாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேலின் உறவை துருக்கி முறித்துள்ளது. எகிப்து ராணுவத்தினரை அந்நாட்டு எல்லைப் பகுதியில் வைத்து கொலை செய்ததன் காரணமாக கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரகம் மூடப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza