புதுடெல்லி:தடை உத்தரவை மீறிய நான்கு அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவுச்செய்துள்ளனர்.லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் நெரிசல் மிகுந்த கொன்னாட் ப்ளேஸில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவுச்செய்யப்பட்டுள்ளது.
அரவிந்த் கவுர், ஸ்வாதி, நீரஜ், சஞ்சய் ஆகியோர் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 188-இன் படி வழக்கு பதிவுச்செய்யப்பட்டுள்ளது.கலைந்து செல்ல கோரிக்கை விடுத்தும் மேற்கண்ட நபர்களின் தலைமையிலான 125க்கும் மேற்பட்ட நபர்கள் கலைந்து செல்லவில்லை என போலீஸ் கூறுகிறது.
மேலும் போராட்டம் நடத்த வந்தவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment