புதுடெல்லி:ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19-வது ஆண்டு நினைவு தினமான இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாசிச எதிர்ப்பு தினத்தை கடைப்பிடிக்கிறது.
பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்களை வெளிச்சம் போட்டு காட்டும் லிபர்ஹான் கமிஷன் 2 வருடங்கள் தாண்டிய பிறகும் அதன் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான துணிச்சலை காட்டாத மத்திய அரசுக்கு எதிராகவும், பாப்ரி மஸ்ஜித் நிலத்தை மூன்றாக பங்கீடு செய்து தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதியை குறித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தர்ணா போராட்டம் நடைபெறும்.
0 கருத்துரைகள்:
Post a Comment