Friday, December 2, 2011

இம்பாலில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்

imphal
இம்பால்:கடந்த புதன் அன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் அவர்கள் வருகின்ற சனிக் கிழமையன்று புதிதாக கட்டப்பட்டுள்ள மாநில தலைமையகத்தை திறந்துவைக்க வருவதாக இருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குண்டு வெடிப்பு  மாநில தலைமையகத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளது.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையும், வெடிகுண்டு நிபுணர் குழுவும் வந்து தடையங்களை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் அங்கு போலிஸ் குவிக்கப்பட்டு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை முடிக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் வெடித்த குண்டு ரிக்சாவில் வைக்கப்பட்டு இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza