Thursday, December 8, 2011

ஆஃப்கன் தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசை எதிர்கொள்வோம் – கர்சாய் உறுதி

காபூல்:ஆஃப்கனில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ ஜாங்வி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அல்கொய்தா, தலிபான் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அச்செய்தி வெளிவந்துள்ளது.

கண்ணிவெடி:இதற்கிடையே, ஆஃப்கனில் நேற்று கண்ணி வெடி வெடித்து 19 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணம் லஷ்கர் கா என்ற இடத்திலிருந்து ஒரு பிரிவினர் சங்கின் நகருக்கு நேற்று வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்தது. இதில் வேனில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உட்பட 19 பேர் பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடிப்பில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை பார்வையிட்ட அதிபர் ஹமீத் கர்சாய், ‘விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இது குறித்து பாகிஸ்தான் அரசிடம் பேசப்போகிறோம். இது வெறும் முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பினால் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, மனித இனத்துக்கே எதிரானது. பலியானோர்களின் இரத்த வடுக்களை, குறிப்பாக குழந்தைகளுடையதை ஆப்கானிஸ்தான் அலட்சியப்படுத்தாது’ என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza