Sunday, June 30, 2013

மதுரை-ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் பகலில் கூடுதல் ரயில்


தினமும் இரவு 12 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டு, மதுரை-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-மதுரைக்கு காலை 11.50 மணிக்கு கிளம்பும் வகையில் பாசஞ்சர் ரயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. 
ராமேஸ்வரத்தில் காலை 5.40க்கு கிளம்பும் ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் காலை 5.20 மணிக்கும், மதுரையில் காலை 6.40க்கு கிளம்பும் மதுரை-ராமேஸ்வரம் பாசஞ்சர் காலை 6.20 மணிக்கும் கிளம்பும். மாலையில் மதுரையில் 6.15க்கு கிளம்பிய ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் மாலை 6.05க்கும் 
ராமேஸ்வரத்தில் 5.25 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் மாலை 6 மணிக்கும் கிளம்பும். 

Saturday, June 29, 2013

இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா!


சென்னை: இலக்கியச்சோலை வெளியீட்டகம் ஏறத்தாழ பதினெட்டு வருடங்களாக தரமான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது வரை நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பண்டைய நாவல்களை மீண்டும் வெளியிடும் நோக்கத்திற்காக புதுயுகம் என்ற வெளியீட்டகமும் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

 இந்த வெளியீட்டகங்களின் புதிய ஆறு புத்தகங்களை வெளியிடும் விழா சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் ஜூன் 14, 2013 அன்று மாலை நடைபெற்றது. இலக்கியச்சோலை நிர்வாக குழு உறுப்பினர் குத்புதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியச்சோலையின் பொறுப்பாளர் அகமது ஃபக்ருதீன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Friday, June 28, 2013

சொராப்தீன் என்கவுண்டர் சாட்சி கொல்லப்பட்டது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்!

 அஹ்மதாபாத் : குஜராத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சாட்சியாக இருந்த துளசிராம் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றி கொலை செய்த காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குஜராத்தில் சொஹ்ராபுதீன் ஷேக் என்பவரும் அவர் மனைவி கவுசர் பீவியும் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலி என்கவுண்டரில் சொஹ்ராபுதீன் கொல்லப்பட்டார். இரண்டு நாடுகள் கழித்து அவர் மனைவி கவுசர்பீவியும் கொல்லப்பட்டார். குஜராத் மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மோடியின் வலது கையும் அமைச்சருமான அமித் ஷாவும் இக்கொலைகளுக்கு பின்னால் இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேரின் படுகொலை மோடியின் அனுமதியுடன் நடந்தது!


M_Id_394598_Ishrat_Jahan

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியின் அனுமதியுடனே போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் அன்றைய உள்துறை அமைச்சரும், மோடியின் நெருங்கிய கூட்டாளியுமான அமித்ஷாவுக்கு பங்கிருப்பது சி.பி.ஐயின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சித்திரவதைக்கு ஆளானோருக்கு சர்வதேச ஆதரவு தினம்! சமூக ஆர்வலர் மீனா கந்தசாமியின் பேட்டி!

சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் மீண்டும் வரும்போது ஒரு ‘சித்திரவதை கட்டமைப்பு’ என்ற நிலையில் ஆட்சி பீடங்களைக் குறித்த விவாதங்கள் தீவிரமடைகின்றன.திட்டமிட்ட ஆட்சியாளர்களின் மொழியின் அடித்தளத்தில் தான் உலகமெங்கும் அரசு ரீதியான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன.
பொதுவாக ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியை கற்பனையில் உருவாக்குவார்கள்.அதற்கு எதிரான கொள்கைகளை உருவாக்குவார்கள்.கற்பனை எதிரிக்கு ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வரலாற்றை வளைப்பார்கள்.அந்த மர்ம உலகில் மனிதர்களையும், மதங்களையும், சித்தாந்தங்களையும் சாத்தானிய சக்தியாக சித்தரிப்பார்கள்.அறிவுக்கு முற்றிலும் பொருந்தாத அந்த உலகில் அசாத்தியங்கள் எல்லாம் சாத்தியமாகும்.

Thursday, June 27, 2013

புதுவலசையில் NWF சார்பாக இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

புதுவலசையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. NWF என்ற பெண்கள் அமைப்பு சர்பாக பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி புதுவலசையில் சென்ற 25.06.2013 செவ்வாய்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் கிழக்குத்தெருவில்  நடைபெற்றது.


Tuesday, June 25, 2013

வட சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய இலவச மருத்துவ முகாம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



எஸ்.டி.பி.ஐ கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வட சென்னை மாவட்டம் சார்பாக கொளத்தூர் தொகுதி ஆர்.கே மஹாலில் இலவச மருத்துவ முகாம் நேற்று (23.06.2013)நடைபெற்றது.


இம்முகாமிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொளத்தூர் தொகுதி தலைவர் கராத்தே யூசுப் தலைமை தாங்கினார்.செயலாளர் இம்ரான் அஹமது பெய்க் வரவேற்றார்.மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் பணிகள் - ஓர் பார்வை



குஜராத் கலவர சம்பவங்களை முஸ்லிம்கள் மறக்கவேண்டும்- ராஜ்நாத்சிங்கின் பேச்சுக்கு அதே மேடையில் பதிலடி

 குஜராத்தில் கோத்ரா ரெயில் விபத்தைத் தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்திய வரலாறு காணாத அளவுக்கு நடத்திய கோரமான முஸ்லிம் இனப்படுகொலை சம்பவங்களை முஸ்லிம்கள் மறந்துவிடவேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறியபோது, அதே மேடையில் வீற்றிருந்த ராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையர் பதில் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘சிறுபான்மையினருக்கு எதிரான சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது:–

சித்திரவதை எதிர்ப்பு தினத்தில் டெல்லியில் தர்ணா-பாப்புலர் ஃப்ரண்ட்

சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினமான வருகிறது ஜூன் 26-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்தவிருக்கிறது. ’Say no to death penalty’ (மரணத்தண்டனையை ஒழிப்போம்) என்பது இவ்வருட சித்திரவதை எதிர்ப்பு தின பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கமாக இருக்கும் என்று தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் நடக்கும் தர்ணா போராட்டத்தை தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் துவக்கி வைக்கிறார்.

தக்ஸிம் காஸி பூங்கா போராட்டம் : பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் : விசாரணையை துவக்கியது துருக்கி!

தக்ஸிம் காஸி பூங்கா போராட்டம்:பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்:விசாரணையை துவக்கியது துருக்கி!

அங்காரா : துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள தக்ஸிம் காஸி பூங்காவில் கடந்த 3 வாரங்களாக நடந்துவரும் போராட்டத்தில் வெளிநாட்டு சக்திகளின் பங்கினைக் குறித்து அந்நாட்டு புலனாய்வு பிரிவு விசாரணையை துவக்கியுள்ளது.போராட்டம் குறித்து முழுமையாக புலனாய்வு செய்து ஒருவாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல துருக்கி பத்திரிகையான ஹுர்ரியத் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Sunday, June 23, 2013

சித்தார்கோட்டை,அழகன்குளம் பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

வீடுகளில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த நான்கு பேரை, திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.

திருப்புல்லாணி எஸ்.ஐ., சேசுதாஸ் தலைமையில், ரெகுநாதபுரம் விலக்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவு எண் இல்லாத டூவீலரில் சித்தார்கோட்டை தெய்வேந்திரன், அசோக்குமார், தேனி கடமலைக்குண்டு ராஜா ஆகியோர் வந்தனர்.

குஜராத் கலவரங்களை மறக்க கூடாதா? முஸ்லீம்களை கேட்கும் ராஜ்நாத் சிங்!

ஜெய்பூர் : முஸ்லீம் சமுதாயம் தம் மேல் நிகழ்த்தப்பட்ட குஜராத் கலவரங்களை மறக்க கூடாதா என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெய்பூரில் “சிறுபான்மையினர் பிரச்னைகள்” எனும் தலைப்பில் ஒரு செய்தி சானல் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முஸ்லீம்களுக்கு எதிராக சில சம்பவங்கள் நடந்திருப்பதை ஒத்து கொள்வதாகவும் ஏன் நாம் அதை மறக்க முயற்சிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார். மேலும் 2002 க்கு முன்பு 12,000 மத கலவரங்களில் இந்தியாவில் நடைபெற்றுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்

சார்ஜாவில் விளம்பர துண்டுப் பிரசுரம் (flyers) வைத்தால் விசா ரத்து! நாடு கடத்தல்!!

சார்ஜாவில் வீட்டு வாசல்களில் விளம்பர பிளையர்களை விநியோகம் செய்யும் வெளிநாட்டவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வெப்பமயத்தால் இந்தியாவில் கடும் பஞ்சம்:வறட்சி ஏற்படும்- உலக வங்கி எச்சரிக்கை!

உலக வெப்பமயமாவது -இன்று, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, உலகத்தையே உலைகளமாக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தின் சராசரி வெப்பத்தை விட 1 .7 % வெப்பம் அதிகமாகிவிட்டதாகவும், இதனை 2020 வரை 2 % க்கு மேல் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் இணைந்து ஒருமித்த ஒப்பந்தங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு , அதற்கான பிரச்சாரத்திலும், தேவையான முன் எச்சிரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன.

Saturday, June 22, 2013

டெல்லியில் நிரபராதிகளை விடுதலைச் செய்ய கோரி SDPI நடத்திய மக்கள் பேரணி!

தீவிரவாத குற்றம் சாட்டி அநியாயமாக சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம், பழங்குடியின, மனித உரிமை ஆர்வலர்களை விடுதலைச் செய்ய கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தலைமையில் டெல்லியில் மக்கள் பேரணி நடைபெற்றது. சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் ஸ்தாபக தினமான நேற்று(ஜூன் 21) ’சலோ பாட்லா ஹவுஸ்’ என்ற பெயரில் கண்டனப் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. டெல்லி ஷாஹின் பாகில் இருந்து துவங்கி டெல்லி பாட்லா ஹவுஸ் வரை இப்பேரணி நடத்தப்பட்டது. பாட்லா ஹவுஸில் வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக போலீஸின் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர்.

பாப்புலர் ஃபிரண்ட் மீது அவதூறு செய்தி வெளியிட்ட 10 நாளிதழ்களுக்கு பிரஸ் கவுன்சில் நோட்டீஸ்!

பாப்புலர் ஃ பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட பத்து நாளிதழ்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொருட்டு வரும் ஜுலை 16 ந்தேதி அன்று விசாரணை குழு முன் ஆஜராகும் படி பிரஸ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவில் பத்திரிகைகளை கட்டுபடுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் தங்கள் அமைப்பின் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக பத்து நாளிதழ்கள் மீது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா புகார் கொடுத்தது.

UAPA சட்டம் ஒரு விரிவான பார்வை..!


நவம்பரில் (2009)மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை திருத்தி புதிய சட்டம் (UAPA) பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு அவசரமாக உருவாக்கியுள்ளது. உருப்படியாக எந்த விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களின் மூலம், நாட்டை அரசு பயங்கரவாத அரசாக காங்கிரஸ் அரசு மாற்றியமைத்துள்ளது.

Wednesday, June 19, 2013

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஸ்கூல் சலோ!

சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது.வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் கடந்த மாதம் இந்நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில துவக்க விழா திண்டுக்கல் மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது.

புதுவலசை SDPI நடத்திய UAPA கருப்பு சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம்

UAPA (UNLAWFULL ACTIVITIES PREVENTION ACT) சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் இன்று (13.06.2013) பிரதமர் அவர்களுக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. யுஏபிஏ (UAPA) என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது. 

இஷ்ரத் போலி என்கவுண்டர்: ஜூலை 4-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!

2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையை அடுத்த மாதம் 4-ஆம் தேதி தாக்கல் செய்ய குஜராத் உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வருகிறார்கள் என்றும், இந்த முறையை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகளான ஜய்ந்த் பட்டேல், அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது. 

இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கோவையில் "உண்மையும் உரிமையும் " பொதுக்கூட்டம்-பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் பங்கேற்பு


கோவை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் லாரிப்பேட்டையில் 16.06.2013 அன்று மாலை 5.00 மணி அளவில் "உண்மையும் உரிமையும் " என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனீஃபா தலைமை தாங்கினார்.

அரசியல் மூலம் எதுவும் நடக்காது-மோகன் பகவத்

அரசியல் மூலம் எதுவும் நடக்காது, ஹிந்துத்துவாவினால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு பா.ஜனதாவை சேர்ந்த அத்வானி மட்டுமல்லாது, கூட்டணி கட்சியின் சில தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tuesday, June 18, 2013

மலேசியாவில் நடைபெற்ற "இஸ்லாத்திற்கு எதிரான சதியும்! முஸ்லிம்களின் நிலையும்!''- கருத்தரங்கம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (16/06/13) "இஸ்லாத்திற்கு எதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


 இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சவூதி: இந்த ஆண்டு ஹஜ் பயனர் எண்ணிக்கையை 20 % குறைக்க முடிவு!

சவூதி: இந்த ஆண்டு ஹஜ் பயனர் எண்ணிக்கையை 20 % குறைக்க முடிவு!
வருடந்தோறும் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது வழக்கம்.
சுமார் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கூடும் இந்த ஆன்மிக மாநாட்டில்  கலந்து கொள்ளும் வெளிநாட்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 20 விழுக்காடு குறைப்பதற்கு சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்த ஓரிரு ஆண்டுகளிலும் இந்த நடவடிக்கையே தொடரலாம்  என்றும் கூறப்பட்டுள்ளது.

வகுப்புவாத உணர்வை தூண்டி வாக்கு வங்கியை திரட்ட அயோத்திக்கு செல்லும் மோடி!


1849506

அயோத்தி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களின் இறை இல்லமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அயோத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தல் வரவிருக்கும் வேளையில் சமூகங்களிடையே பிளவை உருவாக்கி ஆதாயம் தேடும் நோக்கில் மோடி பா.ஜ.கவின் பிரச்சாரக் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அயோத்திக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Monday, June 17, 2013

உணவு தரக் கட்டுப்பாட்டு சோதனை எதிரொலி: பிரபலங்கள் மீது வழக்கு பதிவு..!

சச்சின், தோனி,ரெய்னா மீது வழக்கு!
புதுடெல்லி: பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்,தோனி,ரெய்னா உட்பட 8 கிரிக்கெட் வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதுகுறித்து கூறப் படுவதாவது:

அரசு உணவு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் உத்தரகாண்ட்டில் உள்ள 'சஹாரா க்யூ ஷாப்' உள்ளிட்ட ஹோட்டல்களிலும்  மற்றும்  கடைகளிலும் உத்ராகண்ட் அரசு தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்தியது. இங்கு சில காலாவதியான உணவுப் பொருட்களை இவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

Sunday, June 16, 2013

சட்டவிரோத சுரங்கத்தொழில்: குஜராத் பா.ஜ.க அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை!

குஜராத்தில் சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கல் வெட்டியெடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் மாநில அமைச்சர் பாபு பொக்கிரியா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குஜராத் நீர்வளத் துறை அமைச்சர் பாபு பொக்கிரியா, காங்கிரஸ் எம்.பி. பரத் ஓடேதாரா, நிழல் உலக தாதா பீமா துலா, அவரது மகன் லட்சுமண் துலா ஆகியோர் சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கல்லை வெட்டியெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹஸன் ரூஹானி தெரிவு!


டெஹ்ரான் - ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹஸன் ரூஹானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஈரானில் நேற்று புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 73 சதவிகித மக்கள் வாக்களித்தனர். ஆறு பேர் கலந்துக் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஹஸன் ரூஹானி வெற்றி பெற்றுள்ளார். வாக்களிக்கப்பட்ட 36, 704,156 வாக்குகளில், இவர் 18,613,329 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் முன்னாள் ஜனாதிபதி அக்பர் ஹாஷ்மி ரப்சஞ்சானியின் ஆதரவைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 14, 2013

“எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் துணிக்கோடியும், தெருக்கோடியும்தான்”

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் “போர்பஸ்’ என்ற வாரமிருமுறை செய்தி ஏடு 1917-இல் துவங்கப்பட்டது. அது பொருளாதார-வியாபார விவரங்களை வெளியிடும் பத்திரிகை. அமெரிக்க அளவில் மட்டுமல்ல, உலகின் முக்கிய நாடுகள் பற்றியும் ஆராய்வதில் அது ஈடுபட்டு வருகிறது. அதில் துவங்கி, ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் ஆண்டு வருமானம், நிதி நிலைமை ஆகியவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து வெளியிடுகிறது.
1987 முதல் ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் ஒருவர் சேர்க்கப்படுவதற்கு, அவருடைய நிர்வாகத்தில் உள்ள நிறுவனச் சொத்தின் அளவு அமெரிக்க டாலர் மதிப்பில் “ஒரு பில்லியன்’ அளவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

அமெரிக்காவின் இணையதள உளவு: கூடுதல் விபரங்களை கேட்கும் இந்தியா!

ஹேக்கிங் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாக சீனா கூறியுள்ளது. பல வருடங்களாக சீனாவுக்கு எதிராக அமெரிக்கா சைபர் தாக்குதல்களை நடத்துவதாக
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்ட தகவலின் பின்னணியில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹியூ சன்சிங்கின் அறிக்கை வெளியாகியுள்ளது.

ரியல் எஸ்டேட்: மத்திய அரசின் புதிய விதிமுறைகள்

re
பெருநகர் பகுதிகளில் மக்கள் குடியேற்றம் அதிகரிப்பு, சொந்த வீட்டு கனவு போன்ற காரணங்களால் வீட்டு மனையின் மதிப்பு வெகுவாக உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் மற்ற பகுதிகளை விட நகர்புறங்களையொட்டிய இடங்கள் அதிக அளவில் வீட்டு
மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த இடத்தை வாங்கி வீடாக மாற்றி கனவு இல்ல தேவையை நிவர்த்தி செய்ய பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ரியல் எஸ்டேட் தொழிலும் விளங்குகிறது.

திருவாடனை தொகுதி SDPI சார்பாக பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்!

thanthi porattam
 யுஏபிஏ சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் இன்று (13.06.2013) பிரதமர் அவர்களுக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

யுஏபிஏ (UAPA) என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது.

Wednesday, June 12, 2013

தீவிரவாத குற்றங்களை பொய்யாக முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் காவல் துறைக்கு மே-17 இயக்கம் கண்டனம்

பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அருகே ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக கர்நாடக, தமிழ் நாட்டு காவல் துறைகள் திட்டமிட்டு தமிழக முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை, அரசியல் ஆதாயம் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட சதியாகவே பார்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்த பாசிச நோக்குடன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிது அல்ல. மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோத்தா ரயில் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு என்று நீண்ட பட்டியல் ஒன்றை இதற்கு ஆதாரமாக சுட்டிக் காட்டலாம்.

பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?

பெண்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் காட்டும் அலாதி உலகுக்கேத் தெரியும்!சிம்பிளாக சொல்வதானால் பெண்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது என்று சொல்லலாம். இன்றும் கூட அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும்தான் ஆகிப் போனது நம் இந்தியா.
இதன் விளைவு… ”அழகு சாதனப் பொருட்களுக்குப் பின்னே ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பும் விற்பனையும் இந்தியாவில் குறைந்த விலையில் அளித்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை டெஸ்டிங்கிறகு உட்படுத்துகிறது’ என்ற அதிர்ச்சித் தகவலை முன்னரே சொல்லி இருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். அதிலும் ”பாதரசம் சேர்க்கப்படும் சோப், பாடி லோஷன், க்ரீம் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்” என்றெல்லாம் உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையே வெளியிட்டு இருந்தது.

UAEல் வேலை மாறும் வெளிநாட்டவர்கள் மீதான ‘பணி தடை’க்கு விதிவிலக்கு!

“ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தமது வேலையை மாற்றிக் கொள்ளும்போது அவர்கள் மீதான ‘பணி தடை’ 1 வருடத்துக்கு விதிக்கப்படுவதில் மாற்றம் ஏதுமில்லை” என்று அறிவித்துள்ள UAE தொழிலாளர் துறை அமைச்சு, “இந்த தடை குறித்து சில விதிவிலக்குகள் செய்யப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.

மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்த ஸ்னோடனின் நேர்காணல் !

மெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அதன் மக்களை உளவு பார்க்கும் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன் இப்போது ஹாங்காங்கில் புகலிடம் தேடியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய, ஈவு இரக்கமற்ற உளவு அமைப்பிற்கு எதிராக தனது குரலை எழுப்பத் துணிந்த அவரிடம்  கிளென் கிரீன்வால்டும் ஏவன் மெக்ஆஸ்கில்லும் எடுத்த பேட்டி இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்க இரும்புத்திரையை அம்பலப்படுத்தும் ஸ்னோடன் !

திரு எட்வர்ட் ஜோசப் ஸ்னோடன். அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார். பின் லாடனை விட மோசமான தீவிரவாதியாகவும், அமெரிக்க மக்களின் உயிர் பறிக்கும் அரக்கனாகவோ அல்லது பெண் பித்தர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குற்றம் சாட்டப்படலாம்.

Sunday, June 9, 2013

லண்டனுக்கு மேலே பறந்த மர்ம பறக்கும் தட்டுகள்! தரையிறங்கிய விமானிகள் நேரில் பார்த்தனர்!!

லண்டனின் கேட்விக் ஏர்ப்போர்ட்டில் (Gatwick Airport) அடுத்தடுத்து தரையிறங்கிய மூன்று விமானங்களை செலுத்திய விமானிகள், பறக்கும் தட்டு போன்ற தோற்றமுடைய இரு ‘பறக்கும் வஸ்துகள்’ லண்டனுக்கு மேல் பார்த்ததாக ரிப்போர்ட் செய்த தகவல் வெளியாகியுள்ளது.

கீழக்கரை அருகே மதுக்கடையை அகற்ற கோரி எஸ்.டி.பி.ஐ சார்பில் உண்ணாவிரதம்!


கீழக்கரை அருகே வண்ணாங்குண்டுவில் மதுக்கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தபட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முதல் தொடர் உண்ணாவிரம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமாக மாற்றப்பட்டது

உண்ணாவிரதத்திற்கு மாவட்ட துணை தலைவர் சோமு தலைமை வகிததார்.மாவட்ட துணை தலைவர் பைரோஸ்கான்,மாவட்ட  செயலாளர்கள் ஜமீல்,செய்யது இப்ராகிம்,தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், தொகுதி செயலாளர் சேகு இப்ராஹிம்,ஒருங்கினைப்பாளர் கார்மேகம், முன்னிலை வகித்தனர்.நகர் தலைவர் அஸ்கர் அலி வரவேற்றார். 

அமெரிக்காவின் மின்னஞ்சல் வேவு! முதலிடத்தில் ஈரான், 5வது இடத்தில் இந்தியா!

சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் தளங்களின் சர்வர்களை உளவு பார்க்கும் அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு அமைப்பின் வேவுப் பட்டியலில் ஈரான் முதலிடத்திலும் இந்தியா 5-வது இடத்திலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் தளங்கள் மூலம் அனுப்படும் தகவல்கள் மற்றும் பகிர்வுகளை வேவுபார்க்கும் அமெரிக்காவின் வேவுப் பட்டியலில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இருந்து 1,400 கோடி உளவுத் தகவல்கள் பெறப்பட்டதாக கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Saturday, June 8, 2013

தமிழக அரசியல் கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட ஓரணியில் திரள வேண்டும்- SDPI


யு.ஏ.பி.ஏ (UAPA) சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜுன் 9 முதல் 18 வரை தொடர் பிரச்சார இயக்கம்.எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு தீர்மானம்

எஸ்.டி.பி.ஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநில செயற்குழு இன்று(06.06.2013) மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது. 

பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தளங்களின் சர்வர்கள் அமெரிக்காவால் உளவு!

கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி வலைத்தளங்களின் சர்வர்களில் நுழைந்து அமெரிக்கா உளவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிநபர்களைக் குறிவைத்து மைக்ரோசாஃப்ட்டின் ஹாட்மெயில், யாஹு, கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள், யூடியூப், அமெரிக்கன் ஆன்லைன், ஸ்கைப் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களின் சர்வர்களில் நுழைந்து, அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் போஸ்ட்' மற்றும் பிரிட்டனின் 'தி கார்டியன்' பத்திரிகையும் செய்தி வெளியிட்டன.

Thursday, June 6, 2013

கிரிக்கெட் வீரர்கள் மீது மோக்கா(MCOCA): பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 22 பேர் மீது மோக்கா-MCOCA(மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்
கடுமையான பிரிவுகளை பிரயோகித்தது கண்டனத்திற்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துள்ளது.

Wednesday, June 5, 2013

சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: பிரான்ஸ் குற்றச்சாட்டு!

சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
சாரீன் என்ற இரசாயனத்தை சிரிய அரசாங்கப் படையினர் பயன்படுத்தியமை சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதாக பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் லுரான்ட் பெபியஸ் தெரிவித்துள்ளார்.

நிரபராதிகள் கைது: நிமேஷ் கமிஷனின் அறிக்கையை அங்கீகரித்தது உ.பி அரசு!

போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்த காலித் முஜாஹித் நிரபாரதி என்பதை நிரூபிக்கும் நிமேஷ் கமிஷனின் அறிக்கையை உ.பி மாநில அரசு அங்கீகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் காலித் முஜாஹித் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நிமேஷ் கமிஷன் விசாரித்து வந்தது. இக்கமிஷனின் அறிக்கை உ.பியில் ஆளும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது இந்த அறிக்கையை அங்கீகரிப்பதாகவும், வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் இதுக் குறித்து விவாதிக்கப்படும் என்றும் முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தீவிரவாதக் குழுவை உருவாக்கிய போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கைது!

ஜம்மு-கஷ்மீரில் தோடா-கிஷ்த்வார் பகுதியில் 68 பேரை என்கவுண்டரில் படுகொலைச் செய்த சப்-இன்ஸ்பெக்டரை, சொந்தமாக தீவிரவாதக் குழுவை உருவாக்கிய குற்றம் தொடர்பாக போலீஸ் கைது செய்துள்ளது.
குடியரசு தலைவரின் வீர விருதை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஷிவ்குமார் சர்மா என்பவரை தோடாவில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளது.

Tuesday, June 4, 2013

கீழக்கரைரை நகராட்சி முறைகேடு கண்டித்து தொடர் போராட்டம்! SDPI உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!


கீழக்கரைரை நகராட்சியில் 

நடைபெறும் முறைகேடுகளை 

தடுப்பது குறித்து ஆலோசனை 

கூட்டம் தனியார் திருமண 

மண்டபத்தில்  கட்சிகள் மற்றும் 

சமூகத்தினர், இயக்கங்கள் சார்பில் 

நடைபெற்றது.


சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா() மாநில பொது 

செயலாளர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார்.

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவி தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ,புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கு, புதிதாக உதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

1) 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு

2) பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிப்பது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்! தகவல் ஆணையம் உத்தரவு!

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்கள் அளிப்பது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி அரசியல் கட்சிகளிடமிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெறலாம். இதனால் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும் செலவு குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் தேர்வு குறித்த கேள்விகளுக்கும் அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Dua For Gaza