தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்கள் அளிப்பது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி அரசியல் கட்சிகளிடமிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெறலாம். இதனால் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும் செலவு குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் தேர்வு குறித்த கேள்விகளுக்கும் அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷணும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான சுபாஷ் அகர்வால் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதே மத்திய தகவல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு, சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை அனைத்து கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் இந்த உத்தரவை எதிர்த்து அரசியல் கட்சிகள் நீதிமன்றத்திற்கு செல்லலாம் எனத் தெரிகிறது.
-New India
-New India
0 கருத்துரைகள்:
Post a Comment