எஸ்.டி.பி.ஐ கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வட சென்னை மாவட்டம் சார்பாக கொளத்தூர் தொகுதி ஆர்.கே மஹாலில் இலவச மருத்துவ முகாம் நேற்று (23.06.2013)நடைபெற்றது.
இம்முகாமிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொளத்தூர் தொகுதி தலைவர் கராத்தே யூசுப் தலைமை தாங்கினார்.செயலாளர் இம்ரான் அஹமது பெய்க் வரவேற்றார்.மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் துணை முதல்வரும்,கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.
வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீது மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
இம்முகாமில் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 2140 நபர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றனர்.சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
இறுதியாக தொகுதி பொருளாளர் ஜாக்கீர் பாய் நன்றி கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment