கீழக்கரைரை நகராட்சியில்
நடைபெறும் முறைகேடுகளை
தடுப்பது குறித்து ஆலோசனை
கூட்டம் தனியார் திருமண
மண்டபத்தில் கட்சிகள் மற்றும்
சமூகத்தினர், இயக்கங்கள் சார்பில்
நடைபெற்றது.
சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா() மாநில பொது
தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம்,மனித நேய மக்கள் கட்சியின்
சிராஜ்,தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஹாஜா,கம்ப்யுனிஸ்ட் சார்பாக
மகாலிங்கம்,புதிய தமிழகம் சார்பாக ரஹ்மத்நிஷா,விடுதலை சிறுத்தை
சார்பாக அற்புதகுமார்,முன்னிலை வகித்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட
செயற்குழு உறுப்பினர் முஜிப்ரஹ்மான்,நகர் தலைவர் இஸ்ஹாக்,துணை
தலைவர் அப்துல் ஹாதி,சித்தீக் மற்றும் காதர் மூர்த்தி மற்றும் மக்கள் நல
பாதுகாப்பு கழகம் தலைவர் தமீமுதீன்,மக்கள் அறக்கட்டளை
இஸ்மாயில்,மக்கள் நல இயக்கம் பசீர் அகமது உள்ளிட்ட மற்றும் கீழக்கரை
பல்வேறு ஜமாத்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் கீழக்கரை நகராட்சியின் 19 மாத கால சாதனை கீழக்கரை மக்களின்
வேதனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
அதில் 19 மாத காலத்தில் 7 கோடியே 64 லட்சம் நிதியில் நடைபெற்ற
திட்டப்பணிகள் அதை செய்த ஒப்பந்ததாரர் அவர் செய்த பணி குறித்து ஆய்வு,
நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அது குறித்து தங்களின் கருத்துக்களை கூறினர்.
கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.அனைவருடைய
கருத்துக்களையும் நிறைவு பெற்ற பிறகு தலைமை வகித்த அப்துல் ஹமீது பேசியதாவது,
கீழக்கரையில் 19மாத காலத்தில் 7 கோடிக்கு மேல் பெறப்பட்ட நிதியில் எந்த பணியும் சரியான முறையில் நடைபெற்றிருப்பதாக தெரியவில்லை.
அனைத்திலும் முறைகேடு நடந்துருப்பதாக அறிகிறேன். இதனை கண்டிக்கும் வகையில் பொதுமக் களை திரட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்
கவுன்சிலர் முகைதீன் இப்ராஹிம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
-source: keelakarai times
-source: keelakarai times
0 கருத்துரைகள்:
Post a Comment