Sunday, June 23, 2013

உலக வெப்பமயத்தால் இந்தியாவில் கடும் பஞ்சம்:வறட்சி ஏற்படும்- உலக வங்கி எச்சரிக்கை!

உலக வெப்பமயமாவது -இன்று, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, உலகத்தையே உலைகளமாக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தின் சராசரி வெப்பத்தை விட 1 .7 % வெப்பம் அதிகமாகிவிட்டதாகவும், இதனை 2020 வரை 2 % க்கு மேல் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் இணைந்து ஒருமித்த ஒப்பந்தங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு , அதற்கான பிரச்சாரத்திலும், தேவையான முன் எச்சிரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன.

ஆனால் பெரிய அளவில் பலனேதும் இல்லை. இவ்வாறாக உலகத்தை மாற்றியதில் தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஒரு காரணமாக இருந்துவிட்டோம் இருந்து கொண்டிருக்கிறோம்.அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டுள்ள மலிவு விலை காய்கறிக் கடைகளில் கூட இலவசமாக பிளாஸ்டிக் பைகளை வழங்கி பூமிக்கு பாதகம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
இந்நிலையில் உலகம் வெப்பமயமாவதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வறட்சியும், உணவு பஞ்சமும் ஏறபடும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. கடந்த 140 ஆண்டுகளில், 2001 ஆம் ஆண்டு முதல்தான் புவிவெப்பம் அதிகரி த்து வருவதாக, உலக தட்ப வெப்பநிலை அமைப்பு (World meteorological Organisation ) தெரிவித்து உள்ளதையும். 1860 இல் இருந்து, புவியின் வெப்பநிலை, இயல்பு நிலையைத் தாண்டி, 10 முறை உயர்ந்து உள்ளது. ஆனால், அவற்றுள், 9 முறை 1990 ஆம் ஆண்டுக்குப்பிறகே என்பது அதிர்ச்சிதரத்தக்கது ஆகும் என்றும். 1900 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை மட்டும் புவியின் வெப்பநிலை மூன்று மடங்காகி உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் “அடுத்த 20,30 ஆண்டுகளில் உலக வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் சிக்குவார்கள். ஆப்ரிக்காவில் சகாரா பாலைவனத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணவு பற்றாக்குறை ஏற்படும்.
தெற்கு ஆசியாவில் மழை பெய்யும் முறை மாறி வருகிறது. இதனால் சில பகுதிகள் நீரில் மூழ்கும் நிலையும், சில பகுதிகளில் மின்சார உற்பத்திக்கும், விவசாயத்துக்கும், குடிக்கவும் தண்ணீர் இன்றி திண்டாடும் நிலையும் ஏற்படும்.
மும்பை, கொல்கத்தாவில் கடல் மட்டம் உயர்வதை நன்கு உணர முடியும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டு வனங்கள் பாதிக்கப்படும். தட்பவெப்ப நிலை மாறுவதால் தென்கிழக்கு ஆசிய பகுதியில் மீன் வளம் குறையும். இதனால் கடலோரத்தில் மக்கள் வாழ்வதும் குறையும். சூறாவளிகள் ஏற்பட்டு நகரங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும்.
போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தால், தொழிற்சாலைகள் அதிகம் தோன்றாத காலத்தில் இருந்ததைவிட 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்ப நிலை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நிலவும்”என்று அதில் தெரிவித்துள்ளது.
- aanthaireporter.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza