சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் தளங்களின் சர்வர்களை உளவு பார்க்கும் அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு அமைப்பின் வேவுப் பட்டியலில் ஈரான் முதலிடத்திலும் இந்தியா 5-வது இடத்திலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் தளங்கள் மூலம் அனுப்படும் தகவல்கள் மற்றும் பகிர்வுகளை வேவுபார்க்கும் அமெரிக்காவின் வேவுப் பட்டியலில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இருந்து 1,400 கோடி உளவுத் தகவல்கள் பெறப்பட்டதாக கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானிலிருந்து 1350 கோடி உளவுத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. ஜோர்டானிலிருந்து 1250 கோடி தகவல்களும், எகிப்திலிருந்து 760 கோடி உளவுத் தகவல்களும் பெறப்பட்டுள்ளதாக கார்டியன் தகவல் தெரிவிக்கிறது.
630 கோடி உளவுத் தகவல்கள் பெறப்பட்டு இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு போட்டியாகக் கருதப்படும் சீனாவைவிட இந்தியாவைக் கண்காணிப்பதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
-New India.tv
0 கருத்துரைகள்:
Post a Comment