சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினமான வருகிறது ஜூன் 26-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்தவிருக்கிறது. ’Say no to death penalty’ (மரணத்தண்டனையை ஒழிப்போம்) என்பது இவ்வருட சித்திரவதை எதிர்ப்பு தின பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கமாக இருக்கும் என்று தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் நடக்கும் தர்ணா போராட்டத்தை தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் துவக்கி வைக்கிறார்.
சிறைகளிலும், போலீஸ் கஸ்டடிகளிலும் நிரபராதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்போம்.போலீஸ் காவலிலும், சிறையிலும் கைதிகள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடருகின்றன.மரணத்தண்டனைக்கு எதிராக போராடும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஜனநாயக வாதிகளுக்கும் ஆதரவு அளிப்போம் என்று ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment