Monday, June 17, 2013

உணவு தரக் கட்டுப்பாட்டு சோதனை எதிரொலி: பிரபலங்கள் மீது வழக்கு பதிவு..!

சச்சின், தோனி,ரெய்னா மீது வழக்கு!
புதுடெல்லி: பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்,தோனி,ரெய்னா உட்பட 8 கிரிக்கெட் வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதுகுறித்து கூறப் படுவதாவது:

அரசு உணவு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் உத்தரகாண்ட்டில் உள்ள 'சஹாரா க்யூ ஷாப்' உள்ளிட்ட ஹோட்டல்களிலும்  மற்றும்  கடைகளிலும் உத்ராகண்ட் அரசு தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்தியது. இங்கு சில காலாவதியான உணவுப் பொருட்களை இவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த உணவுப் பொருட்களின் உரிமையாளர்கள் மீதும், இதனை விளம்பரப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின்தோனி, சேவாக், ஜாஹீர்கான், காம்பீர், யுவராஜ்சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் மீதும் மேலும் பாலிவுட் நடிகர்கள் ஹிர்திக் ரோஷன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் மீதும் உதரகண்ட் அரசுவழக்கு தொடர்ந்துள்ளது.


-inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza