Sunday, June 9, 2013

லண்டனுக்கு மேலே பறந்த மர்ம பறக்கும் தட்டுகள்! தரையிறங்கிய விமானிகள் நேரில் பார்த்தனர்!!

லண்டனின் கேட்விக் ஏர்ப்போர்ட்டில் (Gatwick Airport) அடுத்தடுத்து தரையிறங்கிய மூன்று விமானங்களை செலுத்திய விமானிகள், பறக்கும் தட்டு போன்ற தோற்றமுடைய இரு ‘பறக்கும் வஸ்துகள்’ லண்டனுக்கு மேல் பார்த்ததாக ரிப்போர்ட் செய்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 30-ம் தேதி இந்த விமானிகள் செய்திருந்த ரிப்போர்ட், இதுவரை வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது (ஏன்?). எப்படியோ அந்த ரிப்போர்ட் வெளியாகிவிட, இன்று பிரிட்டிஷ் மீடியாக்களில் இந்த விவகாரம் பரபரப்பாக அடிபடுகிறது.
சரி. அன்று என்னதான் நடந்தது?
லண்டனில் இரு பெரிய விமான நிலையங்கள் உள்ளன. மிகப் பெரியது, ஹீத்ரோ. அதைவிட சிறிய கேட்விக் ஏர்போர்ட்டும் பிசியான ஏர்போர்ட்தான். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இரு விமான நிலையங்களுக்கும் வருகின்றன.
கடந்த டிசம்பர் 30-ம் தேதி, காலை 9 மணிக்கு சற்று முன், மூன்று விமானங்களுக்கு அடுத்தடுத்து தரையிறங்க அனுமதி கொடுத்திருந்தது கேட்விக் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல். இந்த 3 விமானங்களும் அடுத்தடுத்து சில நிமிட வித்தியாசத்தில் தரையிறங்க இருந்தன.
முதலில் போயிங் 777 விமானம் ஒன்று தரையிறங்கலுக்கான பைனல் அப்ரோச்சுக்காக உயரத்தை குறைத்தது.
கேட்விக் ஏர்போர்ட் 08R/26L ரன்வேயை நோக்கி பொசிஷன் செய்யப்பட்ட விமானம், ரன்வேயை தொடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், லண்டன் East Grinstead பகுதிக்கு மேலாக தாழப் பறந்தபோது, அதன் விமானிகள் தமது விமானத்துக்கு 100 அடி கீழே வேறு ஏதோ பறப்பதை கண்டிருக்கிறார்கள். 

வெள்ளை அல்லது வெள்ளி நிற பறக்கும் தட்டுக்கள் இரண்டு, அந்த போயிங் 777 விமானம் இறங்கிக் கொண்டிருந்த உயரத்துக்கு கீழே மெதுவாக பறந்து சென்றதை கண்டதாக, அந்த விமாக காக்பிட்டில் இருந்த 3 விமானிகளுமே, விமானம் இறங்கியபின் ரிப்போர்ட் செய்துள்ளனர்.
போயிங் 777 விமானம் இறங்கிய சில நிமிடங்களில், போயிங் 767 விமானம் ஒன்று லேன்டிங் செய்வதற்காக அதே பொசிஷனுக்கு வந்திருக்கிறது. அதை செலுத்திய இரு விமானிகளும், இரு தட்டுக்கள் தரையில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் பறப்பதாக ரேடியோ மூலம் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
ஏர் ராபிக் கன்ட்ரோல் டவர் ராடாரில், UFO எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் வஸ்துகள் (UFO – Unidentified Flying Object) 6 தெரிந்திருக்கின்றன.
இந்த இரண்டாவது விமானம் லேன்டிங் செய்தபின் மூன்றாவதாக தரையிறங்க வந்தது, ஏர்பஸ் A319 விமானம். அதன் விமானிகளும் இந்த பறக்கும் தட்டுகளை பார்த்து, ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவருக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போதும் ஏர் ராபிக் கன்ட்ரோல் டவர் ராடாரில் 6 வஸ்துகள் தெரிந்திருக்கின்றன. ஆனால், அதன்பின் சில விநாடிகளில் அவை ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டன.
3 விமானங்களிலும் இருந்த 7 விமானிகள், மற்றும் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்தவர்கள் இது பற்றி கொடுத்த ரிப்போர்ட் தற்போது எப்படியோ லீக்காகி வெளியே வந்துள்ளது.
இதிலுள்ள மற்றொரு விஷயம், கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 3 விமானங்களின் விமானிகளுமே, கடந்த டிசம்பர் 30-ம் தேதி, காலை 08.55 க்கும் 09.05 க்கும் இடைப்பட்ட நேரத்தில், லண்டன் East Grinstead பகுதிக்கு மேலாக தாழப் பறந்தபோது, இந்த பறக்கும் தட்டுகளை கண்டிருக்கிறார்கள்.
லண்டனில், East Grinstead பகுதியில்தான் பிரிட்டனின் Scientology headquarters இருக்கிறது. இவர்கள் Church of Scientologyயுடன் தொடர்புடையவர்கள். சயின்ஸ் தொடர்பான இவர்களது நம்பிக்கைகள் கருத்துக்கள் எல்லாமே கொஞ்சம் வில்லங்கமானவை. மற்றைய கிரகங்களில் உள்ளவர்களுடன் தமக்கு உள்ள தொடர்புகள் பற்றி இவர்கள் பிரஸ்தாபிப்பது அதிகம்!
இவர்கள் தொடர்பான வழக்குகள் சிலவற்றில் பிரிட்டிஷ் கோர்ட்கள் இந்த அமைப்பை, “pernicious nonsense,” “dangerous material” என்றெல்லாம் வர்ணித்துள்ளன. Church of Scientologyயை ஒரு மதமாக பிரிட்டன் அங்கீகரிக்கவில்லை. தமது மதத்தில் பிரிட்டனில் மட்டும் 118,000 உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று இவர்கள் கூறிக்கொண்டாலும், 2001 census of England and Wales கணக்கெடுப்பின்படி. இந்த அமைப்பின் உறுப்பினர்களாக வெறும் 1,781 பேர் மட்டுமே உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்களது லண்டன் பிராஞ்ச் பில்டிங் ஒன்று அக்டோபர் 2006-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதற்கான செலவு 24 மில்லியன் பவுண்ட்ஸ்! எங்கிருந்துதான் பணம் வருகிறதோ! (ஒருவேளை வேறு கிரகத்தில் இருந்து?)
இந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியின் மேல் பறக்கும் தட்டுகள் பறந்தது, மேலும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரிட்டனின் போலீஸ் முதல் உளவுத்துறை வரை வெவ்வேறு இலாகாக்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை யாரும், எதையும் கண்டுபிடித்ததாக தகவல் இல்லை.

-source: viruviruppu.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza