வீடுகளில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த நான்கு பேரை, திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.
திருப்புல்லாணி எஸ்.ஐ., சேசுதாஸ் தலைமையில், ரெகுநாதபுரம் விலக்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவு எண் இல்லாத டூவீலரில் சித்தார்கோட்டை தெய்வேந்திரன், அசோக்குமார், தேனி கடமலைக்குண்டு ராஜா ஆகியோர் வந்தனர்.
போலீஸ் விசாரணையில், சின்னாண்டி வலசையில் பாட்டியை கத்தியால் தாக்கி ஐந்து பவுன், சித்தார்கோட்டை கடையில் 12 மொபைல் போன்கள், அழகன்குளம் பெட்டிக்கடையில் ரொக்கம் கொள்ளையடித்தாக கூறினர்.
இவர்கள் கூறிய தகவல்படி, ஆற்றாங்கரை சரவணனை, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஐந்து பவுன், ஏழு போன்களை கைப்பற்றினர்.
சித்தார்கோட்டை சமத்துவபுரத்தில் 2011ல் திருட்டுக்காக நடந்த கொலையில் தெய்வேந்திரன், அசோக்குமார் மீதும், தேனி ஓடப்பட்டியில் கடந்தாண்டு திருட்டுக்காக நடந்த கொலையில் ராஜா மீதும் வழக்கு விசாரணையில் உள்ளது. சிறையில் மூன்று பேருக்கும் நட்பு ஏற்பட்டு ஜாமினில் வந்து மீண்டும் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Dinamalar e paper
Source : Dinamalar e paper
0 கருத்துரைகள்:
Post a Comment