கீழக்கரை அருகே வண்ணாங்குண்டுவில் மதுக்கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தபட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முதல் தொடர் உண்ணாவிரம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமாக மாற்றப்பட்டது
உண்ணாவிரதத்திற்கு மாவட்ட துணை தலைவர் சோமு தலைமை வகிததார்.மாவட்ட துணை தலைவர் பைரோஸ்கான்,மாவட்ட செயலாளர்கள் ஜமீல்,செய்யது இப்ராகிம்,தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், தொகுதி செயலாளர் சேகு இப்ராஹிம்,ஒருங்கினைப்பாளர் கார்மேகம், முன்னிலை வகித்தனர்.நகர் தலைவர் அஸ்கர் அலி வரவேற்றார்.
உண்ணாவிரதம் தொடங்கியவுடன் அங்கு வந்த டாஸ்மாக் உதவி மேலாளர் காளிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் ஆகஸ்ட் 1க்குள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என உறுதியளித்தாதால் தொடர் உண்ணாவிரதம் கைவிடப்பட்டு ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற்றது.
source: keelakaraitimes.blogspot.com
0 கருத்துரைகள்:
Post a Comment