Sunday, June 16, 2013

ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹஸன் ரூஹானி தெரிவு!


டெஹ்ரான் - ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹஸன் ரூஹானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஈரானில் நேற்று புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 73 சதவிகித மக்கள் வாக்களித்தனர். ஆறு பேர் கலந்துக் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஹஸன் ரூஹானி வெற்றி பெற்றுள்ளார். வாக்களிக்கப்பட்ட 36, 704,156 வாக்குகளில், இவர் 18,613,329 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் முன்னாள் ஜனாதிபதி அக்பர் ஹாஷ்மி ரப்சஞ்சானியின் ஆதரவைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

13.11.1948 அன்று பிறந்த ரூஹானி, இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் படித்தவர். 65 வயதான இவர் ஒரு மதகுருவும் ஆவார்.  முன்னாள் ஜனாதிபதி கொமேனியின் ஆட்சி முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஈரானின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்தவர் ஆவார். 

ஆங்கிலம், அரபி மற்றும் பெர்சிய மொழிகளில் சரளமாக உரையாடும் ரூஹானி, ஏறத்தாழ 100 புத்தகங்கள் எழுதியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அஹமதிநிஜாதை இவர் தனது பரப்புரையின் போது கடுமையாக விமர்சித்து வந்தார். ஈரானின் பதினோராவது ஜனாதிபதியாக ஹஸன் ரூஹானி பதவியேற்க உள்ளார். 

கடுமையான நிதி நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் ஈரானை எவ்வாறு அதிலிருந்து மீட்டெடுப்பது என்பதுதான் புதிய ஜனாதிபதியின் கடுமையான சவாலாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளது ஆனால் உணவிற்கு சப்பாத்தி இல்லை என்பதுதான் ஈரானின் நிலையாக உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza