கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி வலைத்தளங்களின் சர்வர்களில் நுழைந்து அமெரிக்கா உளவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிநபர்களைக் குறிவைத்து மைக்ரோசாஃப்ட்டின் ஹாட்மெயில், யாஹு, கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள், யூடியூப், அமெரிக்கன் ஆன்லைன், ஸ்கைப் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களின் சர்வர்களில் நுழைந்து, அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் போஸ்ட்' மற்றும் பிரிட்டனின் 'தி கார்டியன்' பத்திரிகையும் செய்தி வெளியிட்டன.
குறிப்பிட்ட சில நபர்களின் நடவடிக்கைகளைப் பின்தொடர்வதற்காக, அவர்களின் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள், இ-மெயில்கள் உள்ளிட்ட ஆவணங்கள் உளவு பார்க்கப்படுவதாக அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க உளவு அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு, PRISM என்று உளவுத் திட்டப் பெயர் வைக்கப்பட்டதாகவும், இது கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
அதேவேளையில், தமது சர்வர்களுக்குள் நேரடியாக நுழைவதற்கு எந்த நாட்டின் அரசுக்கும் அனுமதி இல்லை என்றும், அந்தச் செய்தியில் வெளியாகியுள்ளபடி, தங்கள் நிறுவன சர்வர்களுக்குள் எந்த அரசும் 'பின் வாசல்' வழியாக நுழைய முடியாது என்றும் கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.
அதேவேளையில், இந்தக் குற்றசாட்டுகளை அமெரிக்க உளவு அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment