சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது.வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் கடந்த மாதம் இந்நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில துவக்க விழா திண்டுக்கல் மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஸ்கூல் சலோ (பள்ளி செல்வோம்) நிகழ்ச்சி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று(18.06.2013) செவ்வாய் கிழமை மாலை சுமார் 7 மணியளவில் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ.ஹமித் இப்ராகிம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.இதில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கல்வி சர்வே, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூடங்களில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, பள்ளிக்கூட கிட் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் நடத்தி வருகிறது.
Info: சகோ.ரிஸ்வான்
0 கருத்துரைகள்:
Post a Comment