யுஏபிஏ சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் இன்று (13.06.2013) பிரதமர் அவர்களுக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
யுஏபிஏ (UAPA) என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது.
தடா, பொடா சட்டங்களுக்கு இணையான சட்டமான UAPA (UNLAWFULL ACTIVITIES PREVENTION ACT) சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மனித உரிமைக்கும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் எதிரானதாகும்,
எனவே இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஜுன் 9 முதல் 18 வரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில்தொடர் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளின் சார்பாக யுஏபிஏ (UAPA) சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
திருவாடனை சட்டமன்ற தொகுதி சார்பாகவும் பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment