சார்ஜாவில் வீட்டு வாசல்களில் விளம்பர பிளையர்களை விநியோகம் செய்யும் வெளிநாட்டவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் மற்றைய நகரங்கள் போலவே, சார்ஜாவிலும் அதிகாலைகளில் விளம்பர துண்டுப் பிரசுரங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போடப்படுகின்றன. இது குறித்து பலர் புகார் செய்ததாக தெரிகிறது. அதையடுத்தே இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது ஒரு சட்டமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், சார்ஜாவின் ஷேக் சுல்தான் பின் மொஹமெட் அல் காசிம், சார்ஜா போலீஸிடம் வாய்மொழி உத்தரவாக இதை தெரிவித்துள்ளார். சார்ஜாவில் பிரபல ரேடியோ புரோகிராமான அல் காட் அல் முனாஷெர் (அர்த்தம் – நேரடி இணைப்பு) மூலமே சார்ஜா போலீஸூக்கு இந்த உத்தரவு சுல்தானால் வழங்கப்பட்டது.
அதையடுத்து சார்ஜா போலீஸ் அதிகாலையில் ரோந்து செய்து சிலரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. இனி வீட்டு வாயில்களிலும், நிறுத்தப்பட்டுள்ள கார்களிலும் விளம்பர துண்டுப் பிரசுரங்களை வைப்பவர்களுக்கு தண்டனை (இந்த பணியில் உள்ளவர்கள் வெளிநாட்டவர்களே) விசா ரத்து என்பதுடன், அந்த துண்டுப் பிரசுரங்கைளை வைக்க சொன்ன நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார்ஜா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-Viruviruppu.com
0 கருத்துரைகள்:
Post a Comment