ஹேக்கிங் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாக சீனா கூறியுள்ளது. பல வருடங்களாக சீனாவுக்கு எதிராக அமெரிக்கா சைபர் தாக்குதல்களை நடத்துவதாக
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்ட தகவலின் பின்னணியில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹியூ சன்சிங்கின் அறிக்கை வெளியாகியுள்ளது.
ஹாங்காங்கில் தங்கியுள்ள ஸ்நோடனுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக ஹியூ பதிலளிக்கவில்லை. சீனாவைச் சார்ந்தவர்கள் தங்களின் சைபர் ரகசியங்களை களவாடுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் ஸ்நோடனின் வெளிப்படுத்தல். பழைய பிரிட்டீஷ் காலனிதி ஆதிக்க நாடான ஹாங்காங்கிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பல நாடுகளும் பல தடவை உபயோகித்துள்ளன. ஆனால், ஸ்நோடனை ஒப்படைப்பது குறித்து அமெரிக்கா இதுவரை சீனாவிடம் கோரவில்லை.
ஹாங்காங்கில் சவுத் சீனா மானிங் போஸ்டிற்கு அளித்த பேட்டியில், 2009-ஆம் ஆண்டு முதல் ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் சைபர் தாக்குதல்களை குறித்து ஸ்நோடன் வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாடுகள் மற்றும் குடிமக்களின் சைபர் ரகசியங்களை அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜன்சி களவாடும் விபரம் ஸ்நோடன் வெளியிட்டிருந்தார்.
ஸ்நோடன் வெளியிட்டுள்ள தகவல்கள் கவலையை ஏற்படுத்துவதாக சீன அதிகாரி கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் 61 ஆயிரத்திற்கும் அதிகமான ஹேக்கிங்குகளை அமெரிக்கா நடத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த பெரியதொரு இண்டர்நெட் நெட்வர்க்கைதான் தாங்கள் குறிவைப்பதாக ஸ்நோடன் பேட்டியில் கூறியிருந்தார்.
சீனா பல்கலைக் கழகத்தில் 1990ஆம் ஆண்டு நிறுவிய இண்டர்நெட் எக்ஸேஞ்சின் மீது பல தடவை அமெரிக்கா சைபர் தாக்குதலுக்கு முயன்றதாக ஸ்நோடன் கூறுகிறார்.
இந்த எக்ஸேஞ்ச் பல இண்டர்நெட் நெட்வர்க்குகள் அடங்கியதாகும். எக்ஸேஞ்சை மிக கவனமாக பரிசோதித்து வருவதாகவும் இது வரை ஹேக்கிங் நடந்ததாக தெரியவில்லை என்றும் பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-New India,tv
0 கருத்துரைகள்:
Post a Comment