Wednesday, June 5, 2013

சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: பிரான்ஸ் குற்றச்சாட்டு!

சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
சாரீன் என்ற இரசாயனத்தை சிரிய அரசாங்கப் படையினர் பயன்படுத்தியமை சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதாக பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் லுரான்ட் பெபியஸ் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் பல இடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளைக் கொண்டு பிரான்ஸில் சோதனை நடத்தப்பட்டதாகவும் இதில் சாரீன் என்ற இரசாயனப் பதார்த்தம் காணப்படுகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன தாக்குதல்களுக்கு அரசாங்கமும் அதன் கூட்டணிகளுமே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமையை பிரித்தானியாவும் உறுதிப்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza