Saturday, June 22, 2013

டெல்லியில் நிரபராதிகளை விடுதலைச் செய்ய கோரி SDPI நடத்திய மக்கள் பேரணி!

தீவிரவாத குற்றம் சாட்டி அநியாயமாக சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம், பழங்குடியின, மனித உரிமை ஆர்வலர்களை விடுதலைச் செய்ய கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தலைமையில் டெல்லியில் மக்கள் பேரணி நடைபெற்றது. சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் ஸ்தாபக தினமான நேற்று(ஜூன் 21) ’சலோ பாட்லா ஹவுஸ்’ என்ற பெயரில் கண்டனப் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. டெல்லி ஷாஹின் பாகில் இருந்து துவங்கி டெல்லி பாட்லா ஹவுஸ் வரை இப்பேரணி நடத்தப்பட்டது. பாட்லா ஹவுஸில் வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக போலீஸின் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர்.


பொய் வழக்கை சுமத்தி யு.ஏ.பி.ஏ, அப்ஸா போன்ற கறுப்புச் சட்டங்களை சாட்டி சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க பேரணியில் எழுப்பிய முழக்கங்கள் அதிரவைத்தன. பேரணியை தொடர்ந்து பாட்லா ஹவுஸில் நடந்த பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் எ.ஸயீத் தனது உரையில் கூறியது:பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக அரசியல் ரீதியாக பலம் பெற்று போராடினால் மட்டுமே நிரபராதிகளின் விடுதலை சாத்தியமாகும். பொய்வழக்குகளை உருவாக்கி நிரபராதிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்தை பிரயோகித்து போலீஸ் தங்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கிறது. இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் ஆவர். பழங்குடியினரும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் அடங்குவர். சர்வதேச சக்திகள் இந்தியாவில் அரசு கட்டமைப்பை பயன்படுத்தி முஸ்லிம் எதிர்ப்பு அஜண்டாவை செயல்படுத்துகின்றனர்.
1992-ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ தூதரக உறவை இந்தியா ஸ்தாபித்த பிறகே முஸ்லிம்களை குற்றவாளிகளாக்கும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இவ்வாறு எ.ஸயீத் தனது உரையில் கூறினார். எஸ்.டி.பி.ஐயின் முன்னாள் தேசிய தலைவர் இ.அபூபக்கர் தனது உரையில்,’காங்கிரஸ் கட்சியில் சில சிறுபான்மை தலைவர்கள் வாய்ச்சவடால் விடுவதை தவிர சிறுபான்மை சமூகத்திற்கான எவ்வித திட்டங்களையும் அமல்படுத்தவில்லை. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் காங்கிரசுக்கும், இதர அரசியல்கட்சிகளுக்கு எவ்வித விருப்பமும் இல்லை.’என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் பி.அப்துல் நாஸர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில தலைவர் அன்ஸார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza