அரசியல் மூலம் எதுவும் நடக்காது, ஹிந்துத்துவாவினால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு பா.ஜனதாவை சேர்ந்த அத்வானி மட்டுமல்லாது, கூட்டணி கட்சியின் சில தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீரட்டில் நடைபெற்ற ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதுபற்றி மறைமுகமாக குறிப்பிட்ட மோகன் பகவத், மோடி நியமனத்தை யார் வேண்டுமானாலும் விரும்பலாம்; விரும்பாமலும் இருக்கலாம். ஆனால் இந்துத்துவா மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டு வரும். நாங்கள் தலைவர்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை மாற்றுவதனால் ஒன்றும் நடக்காது. அரசியல் மூலம் இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக கொண்டு வர முடியாது. இது இந்துத்துவத்தால் முடியும்.” என்றார்.
சீன படையினரின் ஊடுருவல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக சாடிய அவர், சத்தீஸ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலை பற்றியும் குறிப்பிட்டு, நக்சலைட் தீவிரவாதிகளுக்கு எதிராக தோட்டாக்களை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை கூடாது என்றும் கூறினார்.
-New India.tv
0 கருத்துரைகள்:
Post a Comment