Wednesday, June 5, 2013

தீவிரவாதக் குழுவை உருவாக்கிய போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கைது!

ஜம்மு-கஷ்மீரில் தோடா-கிஷ்த்வார் பகுதியில் 68 பேரை என்கவுண்டரில் படுகொலைச் செய்த சப்-இன்ஸ்பெக்டரை, சொந்தமாக தீவிரவாதக் குழுவை உருவாக்கிய குற்றம் தொடர்பாக போலீஸ் கைது செய்துள்ளது.
குடியரசு தலைவரின் வீர விருதை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஷிவ்குமார் சர்மா என்பவரை தோடாவில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளது.

கிஷ்த்வாரில் சர்மா உருவாக்கிய தீவிரவாதக் குழு இயங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தத்ரி போலீஸ் ஸ்டேஷன் மீது நடத்தப்பட்ட க்ரேனேடு தாக்குதலில் இக்குழுவுக்கு பங்குள்ளது. இதுத் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையில் சர்மாவின் பங்கு குறித்த தகவல் கிடைத்தது.
சர்மா, தங்களுக்கு ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வழங்கினார் என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இப்பகுதியில் சில அரசியல் கொலைகளுக்கும் இக்குழுவினர் சதித் திட்டம் தீட்டியிருந்தனர்.
தத்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களைக் கொலைச் செய்ய முயன்றது தொடர்பாக ஐந்து பேரை ஆயுதங்களுடன் போலீஸ் கைது செய்தது. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கிரேனேடு வெடிக்காததால் சேதங்கள் ஏற்படவில்லை.
போலீஸ் படையில் ராபின்ஹுட் என அழைக்கப்பட்ட சர்மா, பாதுகாப்பு படையினர் நடத்திய பல்வேறு என்கவுண்டர்களில் பங்கேற்றுள்ளார். அதன் பேரில் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

-New India.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza