Sunday, March 31, 2013

“அமெரிக்க போர் விமானங்களை கொரியா பகுதியில் இருந்து அகற்றவும்” -ரஷ்யா


கொரியா பகுதியில் போர் ஏற்படலாம் என்ற பதட்டநிலை தோன்றியுள்ளது குறித்து ரஷ்யா, “அமெரிக்கா அந்தப் பகுதியில் போர் விமானங்களை பறக்க விடுததை தவிர்க்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளது.

கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்க, தென்கொரிய கூட்டு ராணுவ போர் ஒத்திகை நடைபெறுவது, அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் ஒத்திகையில் அரு நாட்டு விமானப்படைகளின் குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

42 முஸ்லீம்கள் கொலை, பள்ளிவாயில்கள், கடைகள் சூறை : பர்மாவில் தொடரும் வன்முறை!

மியான்மர்
மியான்மர் :  மீண்டும் பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிரான  பவுத்தர்களின்  தாக்குதலால் முஸ்லீம்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறுவதும் பலர் காணாமல் போகுவதும் அதிகரித்துள்ளது.


 
2000 நபர்கள் உள்ள சிட் க்வின் எனும் கிராமத்தில் முஸ்லீம்கள் வெறும் 100 நபர்கள் தான். கடந்த வெள்ளியன்று அக்கிராமத்தில் உள்ள முஸ்லீம் கடையின் மீது பவுத்தர்கள் நடத்திய தாக்குதலால் அக்கிராமத்தின் கடைசி முஸ்லீமும் அவ்விடத்தை விட்டு ஓடி விட்டார்.

இந்தியாவில் இன்டர்நெட் சேவை மந்தம்! எகிப்து அருகே ஆழ்கடல் கேபிளை துண்டிக்க முயற்சி!!

இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகம் இன்னும் 20 – 25 நாட்களுக்கு மந்தமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக் கடலில் போடப்பட்டுள்ள இன்டர்நெட் கேபிள்களில், எகிப்துக்கு அருகே நாச வேலை நடந்துள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்குமுன், கடல் அடியே கேபிள்களை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்துள்ளதாக எகிப்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த மூன்று ஸ்கூபா டைவர்களும் (மேலே போட்டோவில் உள்ளவர்கள்) எகிப்தின் அலெக்சான்ட்ரியா துறைமுகத்துக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கேபிள்களை வெட்டும் முயற்சியில் இருந்தபோது, எகிப்திய கடற்படை ரோந்துப் படகு இவர்களை கைது செய்தது.

தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அவர்கள் ஆற்றிய உரை

DSC_2424

  எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை (தேதி 30-3-13) அன்று நடைபெற்ற தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அவர்கள் ஆற்றிய உரை…
எல்லாம் வல்ல இறைவனின் திருநாமம் போற்றி
அனைத்து புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது. அந்த இறைவனின் கருணையும் கிருபையும் நம் உயிரினும் மேலாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீது உண்டாவட்டுமாக
அன்பாக சகோதர சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும்
              நாம் இங்கே எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டாம் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் கூடியிருக்கிறோம். நமது கட்சி துவங்கி 4 வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. நாம் இது வரை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என பல பகுதிகளில் பல மாநாடுகளை நடத்தியிருக்கிறோம்.நாம் பல்லாயிரக்கணக்கானவர்களை சந்தித்து இருக்கிறோம். பல போராட்டங்கள், மறியல்கள், பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு பணிகள் என நாம் கடந்து வந்த பாதைகள் பல.. இது நாம் வெறுமனே தேர்தல் அரசியலை மட்டும் முன் வைத்து பணி செய்யவில்லை என்றும் நாம் போராட்ட அரசியலையே முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறோம் என்பதற்கு சாட்சி பகர்கிறது.

Saturday, March 30, 2013

முஸ்லிம்களை தொடர்ந்து படுகொலை செய்யும் இலங்கையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களை  திட்டமிட்டு அழித்து வரும்  ராஜபக்சே மற்றும் புத்த சிங்கள பாசிஸ குருமார்களுக்கு எதிராகபாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன  ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மீது ஏவப்பட வட கொரிய ராக்கெட்டுகள் தயார் நிலையில்!


அமெரிக்கா, தென் கொரியா, மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்குவதற்காக ராக்கெட்டுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன்.
நேற்று (வெள்ளிக்கிழமை) வட கொரிய தலைநகரில் ஜனாதிபதி, ராணுவ தளபதிகளுடன் நடத்திய அவசர ஆலோசனையை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்கள் மீது தாக்குதல் : பாப்புலர் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்


இலங்கையில் ஆளும் சிங்கள பௌத்த அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்து முஸ்லீம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கெதிராக பள்ளிவாசல் இடிப்பு , ஹலால் முத்திரை நீக்குதல் , முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல் பர்தா மற்றும் தொப்பி அணிந்து வரும் முஸ்லீம்களை அச்சுறுத்துதல் என பல்வேறு அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது .

Friday, March 29, 2013

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுக்குழு நாளை கோவையில் துவங்குகிறது.


எஸ்.டி.பி.ஐ  கட்சியின் தேசிய பொதுக்குழு நாளை துவங்குகிறது.
 மார்ச் 30 ,31ஆகிய  தேதிகளில்  கோவை பாலக்காடு மெயின் ரோடு,ஆயிசா மஹாலில் நடைபெறுகிறது.
நாளை (மார்ச் 30)காலையில் துவங்கும் பொதுக்குழு மார்ச் 31 அன்று மாலையில்   நிறைவடைகிறது.இதில் அனைத்து மாநில தலைவர்களும்,தேசிய தலைவர்களும் கலந்து கொள்வார்கள். 
இதில் கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் குறித்த ஆய்வும்,எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
மேலும் அடுத்த 2 ஆண்டுக்கான கட்சியின் தேசிய நிர்வாகிகள் இப்பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பேட்டை பள்ளிவாசல் விவகாரம்:தொடர்ந்து பொய்யை பரப்புவது யார்?


நெல்லை மாவட்டம் பேட்டையையை நவாப் வாலாஜா  பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல கடைகள் ,மண்டபம்,வீடுகள் என பல இடங்கள் உள்ளன இவைகள் தொடர்ந்து சமுக விரோதிகளின் கையில் சிக்கி மாத வாடகையும் பள்ளிக்கு கிடைக்காமல் இருந்து வந்தது .இந்த பிரச்சினை பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அண்மையில் நீதிமன்றம் இடம் வக்ப் வாரியத்திற்கு (பள்ளி வாசலுக்கு) உரியது என தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் பள்ளியின் சொத்துக்கள் பள்ளிக்கே சொந்தம் என்றும் அதை உடனடியாக ஆக்கிரமிப்பாளர்கள் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் காலி செய்து விட்டு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்வதற்குள் எவ்விதமான கட்டிடங்களையும் இடிப்பது கூடாது என்றும் தீர்ப்பில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது, தீர்ப்பு இவ்வாறு இருந்தும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டிடம் ஒன்றை ஆக்கிரமிப்பாளர்கள் இடித்ததால் பேட்டை முழுவது ஒரு வித பரபரப்பிற்கு உள்ளாக்கப் பட்டது.

கறுப்புச் சட்டங்களை முதலில் வாபஸ் பெறுங்கள்! – மத்திய அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!


:தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படும் என்ற மத்திய அரசின் அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது. அதேவேளையில்  சிறையில் வாழ்க்கையை வீணடிக்கப்படும் நூற்றுக்கணக்கான அப்பாவிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வு என்பது குறித்து சந்தேகத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச்ச்செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

Thursday, March 28, 2013

சஞ்சய்த் தத் போல சைபுன்னிஸாவுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் – கட்ஜு கோரிக்கை!

Katju seeks pardon for Zaibunissa
புதுடெல்லி:1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட சைபுன்னிஸா காஸி என்ற முதிய வயது பெண்மணிக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனுமான மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து கட்ஜு கூறியது: சஞ்சய் தத்தை நேரடியாக சந்தித்ததில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதைப்போலவே சைபுன்னிஸாவும் கருணை காட்டப்பட வேண்டியவர் என்று நான் கருதுகிறேன். முன்பு இவரது வழக்கை நான் விசாரித்திருக்கிறேன். அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பையும், அதுதொடர்பான ஆவணங்களையும் ஆய்வுசெய்துள்ளேன். அவர் சதித்திட்டம் தீட்டினார் என்பதை நீதிமன்றமே உறுதிப்படுத்தவில்லை.

Wednesday, March 27, 2013

இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு முழு ஆதரவு- கேம்பஸ் ஃப்ரண்ட்


கேம்பஸ் ஃப்ரண்ட்!
சென்னை:தமிழ் இன மக்களை இனப்படுகொலைச் செய்த குற்றத்திற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றத்திற்காக விசாரணை நடத்தவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் நீர்த்துப்போன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.ந அவையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை.எனவே ஐ.நா அவையே ஒரு தீர்மானம் எடுத்து இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிக்க ஒரு சுதந்திரமான சர்வதேச குழுவை நியமிக்கவேண்டும். இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் முழு ஆதரவை அளிக்கும் என்று தேசிய செயற்குழு தெரிவித்தது.

விசக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆய்வு!

Photo0020
பரமக்குடி ஒன்றியம் தோளூர் கிராமத்தில் திடீரென  25.03.2013 விஷக்காய்ச்சல் பரவியது.சுமார் 40க்கும் அதிகமானோர் இந்த விசக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோளூர் கிளை தலைவர் ஜீவா தலைமையில் முதலுதவி பணிகள் முடுக்கி விடப்பட்டன.
மேலும் இச்சம்பவத்தை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் பரமக்குடி தொகுதி துணைத்தலைவர் சீதக்காதிர்,செயலாளர் அப்துல்லா சேட்,பரமக்குடி மேற்கு கிளை தலைவர் முருகன்,செயலாளர் லோக செல்வம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து மருத்துவ உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய முறையில் விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tuesday, March 26, 2013

ஜனாதிபதி நாட்டைவிட்டு தப்பி ஓடினார்!! கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றினர்!!


மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர் தலைநகர் பாங்குய்யை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதை தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஃபிரான்கோய்ஸ் போஸிஸ் (François Bozizé) நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

அறிவகம் தாவா குழுவின் “திருக்குரானும் நவீன விஞ்ஞானமும்”புத்தகம் வெளியீட்டு விழா


தேனி மாவட்டம் அறிவகம் தாவா குழுவின் “திருக்குரானும் நவீன விஞ்ஞானமும்” புத்தகம் வெளியீட்டு விழா சனிக்கிழமை 16-03-2013 கம்பம் கோகுலம் யாதவர் மஹாலில் நடைபெற்றது.இதில்தேனி மாவட்டம்  பாப்புலர் ஃப்ரண்ட்  மாவட்ட தலைவர் M.சாந்து முஹம்மதுஅவர்கள் தலைமையில், கம்பம் பாப்புலர் ஃப்ரண்ட்  நகரத்தலைவர் K.சிக்கந்தர் ஜெய்லானி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், P.உலகநாதன் MA.B.L,ஆய்வாளர் வடக்கு காவல் நிலையம், M.U.S.K ஜபருல்லாகான்EX,செயலாளர் வாவேர்பள்ளி, சிக்கந்தர்கான் து.செயலாளர் வாவர்பள்ளி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPI கட்சி தேனி மாவட்ட தலைவர் H. முஹம்மது அபூபக்கர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

உலகின் சக்தி வாய்ந்த அரபுகள்!


உலகின் சக்தி வாய்ந்த அரபுகள்!துபாய் : ஒரு முன்ணணி வணிக பத்திரிகையில் வெளியாகியுள்ள 2013ம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அரபுகள் பட்டியலில் பல ஆச்சரியங்கள் உள்ளன.

அரபுலகில் வெளியாகும் அரேபியன் பிஸினஸ் எனும் வர்த்தக இதழ் வருடா வருடம் சக்தி வாய்ந்த அரபுகள் பட்டியலை வெளியிடும். இவ்வாண்டு வெளியாகியுள்ள பட்டியலில் கடந்த 9 வருடங்களாக முதல் இடத்தை பிடித்திருந்த கிங்டம் ஹோல்டிங் குழும தலைவரும் சவுதியின் இளவரசருமான அல் வலீத்தே முதலிடம் பிடித்துள்ளார். சிட்டி வங்கி மற்றும் ட்விட்டரில் குறிப்பிடத்தக்க ஷேர்களை அல் வலீத் வைத்துள்ளார்.

தேமுதிக – எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்தது ஜனநாயக விரோதமானது! அதனை திரும்ப பெற வேண்டும்!!- SDPI


Untitled-1   SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே. எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 2012 பிப்ரவரியில், தமிழக சட்டசபையில் தே.மு.தி.க எம்.எல்.ஏக்களுக்கும், தே.மு.தி.க விலிருந்து கொண்டே அ.தி.மு.க வுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட விவாதம் கைகலப்பில் முடிந்தது.

பரமக்குடி பகுதியில் திடீரென பரவிய விசக்காய்ச்சல், மருத்துவ சேவையில் எஸ்.டி.பி.ஐ


254197_144995889010311_1887367822_n
 பரமக்குடி ஒன்றியம் தோளூர் கிராமத்தில் திடீரென இன்று (25.03.2013) விஷக்காய்ச்சல் பரவியது. சுமார் 40க்கும் அதிகமானோர் இந்த விசக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோளூர் கிளை தலைவர் ஜீவா தலைமையில் முதலுதவி பணிகள் முடுக்கி விடப்பட்டன. அனைத்து ஆம்புலன்சுகளும் தோளூர் விரைந்தன
        மேலும் இச்சம்பவத்தை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் பரமக்குடி தொகுதி துணைத்தலைவர் சீதக்காதிர்,செயலாளர் அப்துல்லா சேட், பரமக்குடி மேற்கு கிளை தலைவர் முருகன்,செயலாளர் லோக செல்வம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட தோளூர் கிராம மக்களினை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்துவ உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய முறையில் விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

Monday, March 25, 2013

தமிழக வக்பு வாரிய உறுப்பினர் தேர்வு செல்லாது: ஐகோர்ட்டு உத்தரவு !


தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினர்களாக எம்.பி.கள் ஜெ.எம்.ஆரூண் முகமது ஜின்னா ஆகியோரும் எம்.எல்.ஏ.க்கள் ரகீம், முகமது ஜான் (அமைச்சர்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து தமிழ் மகன் உசேன்னை வக்பு வாரியத்தின் தலைவராக தேர்வு செய்திருந்தனர். 

தறிகெட்ட காதலும் தடுமாறும் குடும்பங்களும்!


ஓடிப்போவதற்கான முக்கியக் காரணங்கள்:
தாயோடும், குடும்பத்தோடும் நெருங்கிய தொடர்பு இல்லாமை.
டீன் ஏஜ் அறியாமை.
மார்க்கத்தை சொல்லி வளர்க்காதது.
இந்த வயதுக்கே உரிய அதிகப்படியான எதிர்பார்ப்பு.
தான் எடுக்கும் முடிவு சரிதான் என்று தன் மேல் தனக்கிருக்கும் அதிகப்படியான நம்பிக்கை.
சில நாட்கள் அனுபவம் காலம் முழுவதும் வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை.
உலகில் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட எதுவுமே நிரந்தரமில்லாத போது பிறர் தன் மீது செலுத்துகின்ற அன்புதான் நமக்கு நிரந்தரமான சந்தோசத்தை தரும் என்ற தவறான நம்பிக்கை.
காதலர்களாக இருக்கும் வரைதான் இந்த சந்தோசம் கல்யாணம் முடிந்து விட்டால் அவர்களும் சராசரி கணவன் மனைவியே இது காதல் வாழ்க்கை அல்ல! குடும்ப வாழ்க்கை இதில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணராத டீன் ஏஜ் மனநிலை.

முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட தீவிரவாத வழக்குகளில் விரைவில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்கள்!

INDIA-BRITAIN-RELIGION-PROTEST
புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்கள் கைதுச்செய்யப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். நிரபராதிகளை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கும் புலனாய்வு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.
முஸ்லிம்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்குகளை பரிசோதிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், குற்றவாளிகளாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்எழுதியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Skype, Whats App க்கு சவுதியில் தடை.....?


இணையத்தில் இலவசமாக பேசி கொள்ள உதவும் ஸ்கைப்செய்திகளை பரிமாற கொள்ள உதவும் வாட்ஸ் அப் போன்றவைகளுக்கு சவுதியில் தடை வரும் என தெரிகிறது.
இது தொடர்பாக சவூதியின் தகவல் மற்றும் தொலை தொடர்பு ஆணையம் சம்பந்தப்பட்ட இணைய சேவை நிறுவங்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இச்சேவை தொடர முடியா பட்சத்தில் தடை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sunday, March 24, 2013

தமிழக நிதிநிலை அறிக்கை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!


butjet
  SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
 22.03.2013 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வில்லை.
விலைஉயர்வை கட்டுபடுத்தும் திட்டங்கள்,வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள், மின்வெட்டை நீக்குவதற்கான திட்டங்கள் நிதி நிலை அறிக்கையில் இல்லை. சூரிய ஒழி மின் திட்டம் பற்றி பெரிய அளவில் அறிவித்திருந்தும் அதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறு செய்தி: பத்திரிகைகளுக்கு வக்கீல் நோட்டீஸ்!

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிட்ட டெக்கான் க்ரோனிக்கிள், ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெக்கான் க்ரோனிக்கிளின் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் பதிப்புகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Friday, March 22, 2013

இது வேண்டாம்..அது!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

ஒரு சின்ன கேள்வியோடு இந்த இடுகையை தொடங்குகிறேன்....

ஹலால், ஹராம் என்ற புரிதல் நமக்கு எந்த வயதிலிருந்து வந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஹராமான, தடுக்கப்பட்ட உணவு என்று சொன்னாலே பலருக்கு உடனே நினைவுக்கு வருவது பன்றியின் இறைச்சியும், மதுவும் தான். பெரும்பாலான முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள், பதிலாக 'நாலு கால்' என்றே கூறுவோம் அல்லவா? அந்தளவுக்கு நமக்கு அல்லாஹ் ஹராமக்கியிருக்கும் அந்த இறைச்சியை நாம் வெறுக்கிறோம், அதை வெளிப்படையாக காட்டவும் செய்கிறோம். இந்த ஒரு விஷயம் மட்டும் சிறு வயதிலிருந்தே எல்லார் மனதிலும் ஆணியடித்தார் போல் பதிந்துவிட்டது அல்லவா?

பர்மாவில் மீண்டும் கலவரம்!

பர்மாவில் மீண்டும் கலவரம்
மியான்மர் - பர்மத் தலைநகரான மியான்மரில் வெடித்துள்ள கலவரத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் மூன்று வழிபாட்டுத்தலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் மெய்க்டிலா என்ற இடத்தில் ஒரு முஸ்லிமிற்குச் சொந்தமான நகைக் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கலவரமாக மாறியது. ஏறத்தாழ 200 பேர் தெருக்களில் சண்டையிட்டதில் ஒரு புத்தத்துறவி மற்றும் ஒரு முஸ்லிம்  ஆகியோர் கொல்லப்பட்டனர். மூன்று மசூதிகள் எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இத்தாலிய கடற்படை வீரர்கள் இந்தியா கிளம்பினர்! இத்தாலி அரசு இறங்கி வந்தது!!


மிலான், இத்தாலி: இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவரும், இந்தியா வருகின்றனர். “இந்தியாவில் நடைபெறும் கொலை வழக்கு விசாரணைக்கு 2 இத்தாலிய கடற்படை வீரர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்றிரவே விமானம் ஏறுகின்றனர்” என்று இத்தாலிய அரசு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

Thursday, March 21, 2013

2013-இறுதிக்குள் மதுரை to கோலாலம்பூர் நேரடி விமான சேவை!


மதுரையில் இருந்து மலேசியாவின் கோலாம்பூர் நகருக்கு நேரடி விமான சேவையை நடத்துவதற்கு, Spicejet ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தெரியவருகிறது. Spicejet விமானங்கள் இந்த ரூட்டில் ஆபரேட் செய்வதற்கு Malaysia Airports Holdings Bhd அனுமதி வழங்கிவிட்டது.

ஸ்டாலின் வீட்டில் CBI சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே ! SDPI கட்சி கண்டனம்!


Untitled-1
     SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் சம்பந்தமாக தி .மு .க வின் கோரிக்கை எற்ப்படாததையும் இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதையும் கண்டித்து தி.மு.க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு தனது ஆதரவை திரும்ப பெற்ற இரண்டாவது நாளே தி.மு.க பொருளாளர் மு .க .ஸ்டாலின் வீடு உட்பட தி.மு.க வினருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் CBI சோதனை மேற்கொண்டுள்ளது .இது மோசமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையேயாகும் .

சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: அகிலேஷ்

உத்தரபிரதேசத்தில் உள்ள தாருல் உலூம் நட்வட்டுல் உலமா சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய  அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், 'தவறான வழக்குகளில் சேர்க்கப்பட்டு தீவிரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. சிறுபான்மையினத்தவரின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட எனது அரசு உறுதி பூண்டுள்ளது. 

இராமநாதபுரத்தில் இலங்கையை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


 20130320_121923 இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய ஆதரிக்க வேண்டும், சர்வதேச போர்குற்றவாளி என்று ராஜ பக்சேயை அறிவிக்க வேண்டும், இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும்,இலங்கையில் ஏற்பட்ட மனித உரிமை மீறலை கண்டித்தும்,
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ கட்சி)வின் சார்பாக இன்று இராமநாதபுரம் கேணிக்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா-எகிப்து இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Manmohan Singh, Morsi hold talks, sign seven pacts
புதுடெல்லி:இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. எகிப்தில் 30 ஆண்டு காலம் அதிபராக இருந்த ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து கடந்த 2011இல் அந்நாட்டு மக்கள் புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பதவி விலகினார். அங்கு முதன்முறையாக ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, முஹம்மது முர்ஸி புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் இப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர் இரு தரப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தார். அப்போது, இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையில் சைபர் எனப்படும் இணையதள தொழில்நுட்பப் பாதுகாப்பு, எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மையம் ஒன்றை அமைப்பது, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு, புராதனப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுப்பது ஆகியவை உள்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு தரப்பு ஒத்துழைப்புக்கான துறைகளை இனம்காண்பதற்கும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

Wednesday, March 20, 2013

இராமநாதபுரத்தில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி



இராமநாதபுரம்: மார்ச் - 16 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நவாப் கிட்சன் ஹோட்டலில் ஜமாத்தர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட தலைவர் H. ஹபீப் நவாஸ் கான் அவர்கள் தலைமை தாங்கினார். புதுவலசை முஹம்மது பைசல் வரவேற்றார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். முஹம்மது யூசுப் அவர்கள் சட்ட விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துகளை வழங்கினார். ஜமாத்துகளின் முக்கியத்துவம் மற்றும் ஜமாத்துகள் மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகள் குறித்து மாநிலத்தலைவர் A.S. இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்.

மாணவர் போராட்டத்தை ஆதரித்து எஸ்.டி.பி.ஐ கட்சி இன்று தமிழகம் முழுவதும் போராட்டம்


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்  சென்னையில் நடைபெற்றது.இதன் பிறகு  மாநில தலைவர்  கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி  வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா வின் மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தை வலுசேர்க்கும் திருத்தங்களை கூட செய்ய மத்திய அரசு தயாராக இல்லை.

இக்வானுல் முஸ்லிமீனை நாங்கள் ஊட்டி வளர்க்கவில்லை: கத்தர்!

இக்வானுல் முஸ்லீமீனை நாங்கள் ஊட்டி வளர்க்கவில்லை :கத்தார்

மனாமா : இக்வானுல் முஸ்லிமீன்களை கத்தர் அரசு ஊட்டி வளர்க்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள கத்தர்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மட்டுமே தாம் தொடர்பு கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

மல்லிகை புரட்சிக்குப் பின் அரபுலகில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. துனிசியா, லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் நடந்த புரட்சிகளுக்குப்பின், எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதற்கு முன் எகிப்து அதிபராக இருந்த முபாரக்கோடு நெருங்கிய உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை தற்போதைய எகிப்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றது. தற்பொழுது அமீரக அரசை கவிழ்க்க முயன்றதாக இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பை சார்ந்தவர்கள் என நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tuesday, March 19, 2013

இலங்கையில் தமிழக மக்களுக்கு நடந்த மனித உரிமை மீறலை கண்டித்து இராமநாதபுரத்தில் அரண்மனையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்-எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்பு


மார்ச் 18 காலை 9 மணி  அளவில் இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், ராஜா பக்சேயை சர்வதேச போர் குற்றவாளி என்று  அறிவிக்க கோரியும், இலங்கை சம்பந்தமான ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இராமநாதபுரத்தில் அரண்மனையில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சி, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி ,மற்றும் மாணவர்கள் இயக்கமான கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா  ஆகியவை  இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

Monday, March 18, 2013

மாணவர் போராட்டத்திற்கு SDPI கட்சி ஆதரவு; மாணவர் போராட்டத்தை ஒடுக்கும் மாநில அரசுக்கு கண்டனம்…..

press relese(18.03.2013)

 SDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது…..
     2009-ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது….குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என லட்சக்கனக்கானோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரணடைந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப் பட்டனர்…

Sunday, March 17, 2013

பிஜாப்பூரில் துணை ராணுவப்படையினரின் அட்டூழியம் தொடருகிறது – உண்மை கண்டறியும் குழு!

narayanpatna-shootout-14
புதுடெல்லி:கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி பா.ஜ.க ஆளும் சட்டீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் உள்பட 17 பழங்குடியின மக்களை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் தற்போதும் அங்கு துணை ராணுவப் படையினரின் அட்டூழியம் தொடருவதாக உண்மை கண்டறியும் குழு கூறுகிறது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி முதல் இம்மாதம்(மார்ச்) 2-ஆம் தேதி வரை ஸல்வாஜுதும் குண்டர்களும், துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசும் சேர்ந்து 400க்கும் அதிகமான பழங்குடியின மக்களின் குடிசைகளுக்கு தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

Saturday, March 16, 2013

இத்தாலியை கண்டித்து டெல்லியில் இத்தாலி தூதரகம் நோக்கி எஸ்.டி.பி.ஐ பேரணி


இரண்டு இந்திய மீனவ தொழிலாளர்களை சுட்டுக் கொலைச் செய்த வழக்கில் ஜாமீன் பெற்று நாட்டிற்கு சென்ற இத்தாலி கடற்படையினரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர கோரி டெல்லியில் இத்தாலி தூதரகம் நோக்கி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பேரணி நடத்தியது.தீன்மூர்த்தி பவனில் இருந்து துவங்கிய பேரணி சாணக்கியபுரியை அடைந்தவுடன் போலீஸ் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து இங்கு எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்திய மீனவர்கள் 53 பேர் கைது!படகுகள் சிறை பிடிப்பு-மீனவ குடும்பங்களுக்கு எஸ்.டி.பி.ஐ நேரில் ஆறுதல்

20130314_174401கடந்த இரு தினங்களில் கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்குட்பட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சி மடம் பகுதியை சார்ந்த 53 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து,அவர்களின்  படகுகளையும் சிறைபிடித்தனர்.இதில் 12 வயது சிறுவனும் அடக்கம்.
இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது ஹாலிது தலைமையில் இன்று தங்கச்சி மடம் விரைந்தனர்.பாதிக்கப்பட்ட மீனவகுடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் ,மீனவ அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் அக்குடும்பங்கள் சந்தித்துள்ள நெருக்கடியான நிலையினை விபரமாக எடுத்து கூறினர்.

இனவாத இலங்கை அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்



சென்னை: இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது. 13.03.2013 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது, SDPI யின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைக் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனர், தலைவர் உமர் பாரூக், இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீபா, தோழர் T.S.S. மணி[PUCL], சகோதரி சரஸ்வதி[PUCL], மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.முருகன் ஆகியோர் இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.

Friday, March 15, 2013

சிரிப்பாய் சிரிக்கிது அமெரிக்க தகவல் சுதந்திரம்!


மெரிக்காவில் அரசு நிர்வாகத்தின் தகவல்களை மக்கள் தெரிந்து கொள்வதற்கான Freedom of information act- தகவல்கள் அறியும் உரிமை சட்டம் மக்களுக்கு தகவல்களை தராமல் எப்படி அலைக்கழிக்க உதவுகிறது’ என்று அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
முதலில் அசோசியேட்டட் ப்ரெஸ் என்ன சொல்கிறது என பார்ப்போம்,
அமெரிக்காவில் அரசு நிர்வாகம், கணக்கு தொடர்பான தகவல்களை பெற முழு உரிமை இருக்கிறது. ஒரு விண்ணப்பம் அளித்தால் போதும். இது நம் ஊரில் உள்ள தகவல் பெறும் உரிமை சட்டம் போன்றது.

Wednesday, March 13, 2013

பாகிஸ்தான் – ஈரான் இடையேயான எரிவாயு திட்டம் துவக்கம்! அமெரிக்கா மிரட்டல்!

Pakistan-Iran gas pipeline inaugurated defying US opposition
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் மற்றும் ஈரானின் அதிபர்கள் , இரு நாடுகளையும் இணைக்கும் எரிவாயுக் குழாய்த் தொடரை தொடங்கி வைத்துள்ளனர். பாகிஸ்தானின் எரிசக்திப் பற்றாக் குறையைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தால் எரிச்சல் அடைந்துள்ள ஏகாதிபத்திய அமெரிக்கா, பாகிஸ்தானின் உடனடி எரிசக்திப் பற்றாக்குறையை இது தணிக்காது என்றும், ஈரானின் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு எதிராக தடைகளைக் கொண்டுவரப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

Tuesday, March 12, 2013

தமிழகம் முழுவதும் NWF நடத்திய மகளிர் தின நிகழ்ச்சிகள்


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல் “பெண்களின் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக பொதுக்கூட்டம், பேரணி, கருத்தரங்கம், மற்றும் கட்டுரைபோட்டிகள் நடந்தன.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் NWF சார்பாக நடத்தப்பட்டன.

SDPI மாநில பொதுக்குழு தீர்மானங்கள்...!


DSC_0259
திருச்சியில் நேற்று (09.03.2013) துவங்கிய எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு இன்று (10.03.2013)மாலையுடன் முடிவடைந்தது
திருச்சி எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்
இதில் கடந்த 2 ஆண்டுகளில் கட்சியின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கையை மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.ஆய்வறிக்கை சம்பந்தமாக பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாநில நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

Monday, March 11, 2013

மகளிர் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு! – ஏ.எஸ்.ஸைனபா (NWF- தேசிய துணைத் தலைவர்)

secure women secure nation
சம உரிமை கோரியும், பாரபட்சத்திற்கு எதிராகவும் பெண்கள் நடத்திய போராட்டத்தின் வெற்றியையும், அவர்களின் திட உறுதியையும் நினைவுக் கூறுவதே இத்தினத்தின் நோக்கமாகும்.தேச எல்லைகளுக்கும், நிலப்பரப்புகளின் கலாச்சாரங்களுக்கும் அப்பால் மொழி, தேச, பொருளாதார, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஏராளமான வரலாற்று நிமிடங்களின் நினைவுகள் இத்தினத்தில் பின்னணியில் உள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழில் வளர்ச்சியில் காலூன்றிய பல நாடுகளும் குறைந்த சம்பளம் மற்றும் மோசமான தொழில் சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த பெண்களின் உயிர்த்தெழல் குறித்த செய்தியையும் அளிப்பதுதான் மகளிர் தினம்.

கர்நாடகாவில் நீதியின் புதிய சூரியன் உதித்ததாக யாரும் கருதவேண்டாம்!- மகளின் திருமண உரையில் அப்துல் நாஸர் மஃதனி!

Abdul nasser ma'dani-madani-kerala-daughter-marriage
கொல்லம்:ஐந்து தினங்கள் ஜாமீன் கிடைத்ததன் மூலம் கர்நாடகா அரசிடமிருந்து நீதியின் புதிய சூரிய உதயம் உருவானதாக நான் நம்பவில்லை என்று பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் மத்தியில் உரையாற்றினார் அவர்.
மகள் ஷமீராவின் திருமணத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்துல் நாஸர் மஃதனி. அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது:
அரசுகளிடமிருந்து கிடைக்கும் சித்திரவதைகளால் நான் நிராசையடையவில்லை. சில கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததால் என்னை சிறையில் அடைத்தார்கள். ஆனால், ஒரு தவறும் செய்யாத மலப்புறத்தைச் சார்ந்த ஸக்கரியா என்ற பதினைந்து வயது சிறுவன் உள்பட ஏராளமானோர் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவும் தாலிபானும் கூட்டாக சதி செய்கின்றன : கர்சாய் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்காவும் தாலிபானும் கூட்டாக சதி செய்கின்றன : கர்சாய் பரபரப்பு குற்றச்சாட்டு
காபூல் : ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு துருப்புகள் வெளியேறினால் நிலைமை மோசமாகும் என்று ஆப்கானியர்களை நம்ப வைக்க அமெரிக்காவும் தாலிபானும் கூட்டு சதி செய்து குண்டு வெடிப்புகளை நடத்துவதாக ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

சனிக்கிழமையன்று ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் அருகே நடைபெற்ற உயிர் தியாக தாக்குதலில் 19 நபர்கள் கொல்லப்பட்டனர். மேலும் அதே நாளில் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் காவல்துறை செக் போஸ்ட் அருகே இன்னொரு தாக்குதல் நடந்தது.

Sunday, March 10, 2013

SDPI கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் மாநில பொதுகுழுவில் தேர்வு!


DSC_0259
எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு நேற்று (09.03.2013)திருச்சியில் துவங்கியது.திருச்சியில் எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்

இதில் கடந்த 2 ஆண்டுகளில் கட்சியின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கையை மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.ஆய்வறிக்கை சம்பந்தமாக பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாநில நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

பா.ஜ.க மீது மக்கள் அதிருப்தி – எல்.கே.அத்வானி!


புதுடெல்லி: ‘காங்கிரஸ் மீது மட்டும் அல்லாமல் பாரதீய ஜனதா மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது’ என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானியே கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முன்பு முதல்–மந்திரியாக இருந்த எடியூரப்பா மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடுமையாக போராடி பாரதீய ஜனதா மேலிடம் அவரை முதல்–மந்திரி பதவியில் இருந்து நீக்கியது. பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார். ஆனால் அப்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்த நிதின் கட்காரி, எடியூரப்பா மீதான ஊழல் புகார் பிரச்சினையை சரிவர கையாளவில்லை என பாரதீய ஜனதா மூத்த தலைவரான அத்வானி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

Dua For Gaza