Friday, March 29, 2013

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுக்குழு நாளை கோவையில் துவங்குகிறது.


எஸ்.டி.பி.ஐ  கட்சியின் தேசிய பொதுக்குழு நாளை துவங்குகிறது.
 மார்ச் 30 ,31ஆகிய  தேதிகளில்  கோவை பாலக்காடு மெயின் ரோடு,ஆயிசா மஹாலில் நடைபெறுகிறது.
நாளை (மார்ச் 30)காலையில் துவங்கும் பொதுக்குழு மார்ச் 31 அன்று மாலையில்   நிறைவடைகிறது.இதில் அனைத்து மாநில தலைவர்களும்,தேசிய தலைவர்களும் கலந்து கொள்வார்கள். 
இதில் கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் குறித்த ஆய்வும்,எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
மேலும் அடுத்த 2 ஆண்டுக்கான கட்சியின் தேசிய நிர்வாகிகள் இப்பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி மார்ச் 31 அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.
இன்றைய அரசியல் சூழல் குறித்தும்,பாராளுமன்றத்தேர்தல் சம்பந்தமாகவும் பத்திரிக்காயாளர்களிடம் விவாதிக்கப்படுவதை தொடர்ந்து அன்று மாலை பொதுக்குழு நிறைவு பெறும்.
மேலும் அன்றைய தினத்தில் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் மாபெரும் மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு பொதுக்கூட்டம் மாலை 6.30 மணியளவில் வ.உ.சி.மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் தேசிய,மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza