எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை (தேதி 30-3-13) அன்று நடைபெற்ற தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அவர்கள் ஆற்றிய உரை…
எல்லாம் வல்ல இறைவனின் திருநாமம் போற்றி
அனைத்து புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது. அந்த இறைவனின் கருணையும் கிருபையும் நம் உயிரினும் மேலாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீது உண்டாவட்டுமாக
அன்பாக சகோதர சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் இங்கே எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டாம் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் கூடியிருக்கிறோம். நமது கட்சி துவங்கி 4 வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. நாம் இது வரை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என பல பகுதிகளில் பல மாநாடுகளை நடத்தியிருக்கிறோம்.நாம் பல்லாயிரக்கணக்கானவர்களை சந்தித்து இருக்கிறோம். பல போராட்டங்கள், மறியல்கள், பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு பணிகள் என நாம் கடந்து வந்த பாதைகள் பல.. இது நாம் வெறுமனே தேர்தல் அரசியலை மட்டும் முன் வைத்து பணி செய்யவில்லை என்றும் நாம் போராட்ட அரசியலையே முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறோம் என்பதற்கு சாட்சி பகர்கிறது.
அரசியல் கட்சி என்ற நிலையில் நாம் கூடுமான அளவு அனைத்து மக்கள் பிரச்சனைகளிலும் தலையிட்டு இருக்கிறோம். நாம் பல்வேறு பிரச்சனைகளில் நமது நிலைபாட்டை பத்திரிகை செய்தி வடிவில் மக்களின் கருத்துக்களை எதிரொலித்திருக்கிறோம். தேசத்தை உலுக்கிய அனைத்து பிரச்சனைகளிலும் நாம் பல தீர்மானங்களையும் எடுத்து இருக்கிறோம்.
ஒரு அரசியல் கட்சி என்றுமே தேர்தலை விட்டு விலகி இருக்க இயலாது. நாமும் கடந்த வருடங்களில் பல தேர்தல்களில் நமது வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறோம். உ.பி தேர்தலில் நாம் 10 தொகுதிகளில் நமது வேட்பாளர்கள் போட்டியிட செய்திருக்கிறோம். நாம் கணிசமான அளவு வாக்குகளை வாங்கிட வில்லை. அதே போல் தான் மணிப்பூரிலும் நம்மால் கணிசமான வாக்குகளை பெற இயலவில்லை. மேற்கு வங்கம் பீர் என்ற தொகுதியிலும் நாம் 25,000 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இந்த குறைவான வாக்குகளை பெற்றதால் நாம் மனமுடைய வேண்டிய அவசியம் இல்லை. நாம் மென்மேலும் நமது சக்திகளை ஒன்று திரட்டி இன்னும் அதிகமான களப்பணிகளை செய்திட முன்வரவேண்டும். கர்நாடகாவில் நாம் கடந்த மாநகர மற்றும் முனிசிபல் தேர்தல்களை சந்தித்தோம். அதில் நமக்கு கிடைத்த வெற்றி நாம் ஒரு தெளிவான இலக்கினை நோக்கி பயணி்க்கிறோம் என்று பறைசாற்றுகிறது.
நாம் நமது இந்திய தேசத்தில் ஒரு ஆரோக்கியமான நல்ல தொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடுகிறோம். நமது கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நான் இதே கருத்தை ஏற்கனவே கடந்த 2009 ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதியில் டெல்லியில் நடந்த கட்சி பிரகண்டன தினத்தில் குறிப்பிட்டேன். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 21, 22 ஆகிய தினங்களில் பெங்களூரில் நடைபெற்ற தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிலும் குறிப்பிட்டேன். அதே போல் நமது தேர்தல் அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.
நாம் ஒரு மிக பெரும் பார தூரமான பணியினை செய்து வருகிறோம். அது தான் நமது இந்திய நாடு தொலைத்த கொள்கைக்கு புத்துயிரூட்டும் பணி். அதாவது எந்த ஒரு பாகுபாடும் இல்லாத இந்தியா..நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் காண விரும்பும் ஒரு இந்தியா..இந்த நாட்டின் உண்மையான மன்னர்களாக நமது தேசத்து குடிமக்கள் மாறும் நாள் அது…
இப்படியொரு தேசத்தை கட்டியெழுப்ப அவ்வப்போது சில ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் தேர்தலி்ல் ஈடுபடுவது மட்டுமே போதுமானது இல்லை. நாம் கொண்டு வரும் மாற்றத்தை பற்றிய விழிப்புணர்வும் ஒரு அதிர்வையும் நமது தேசத்தில் ஏற்படுத்த வேண்டும். இந்த பாரதூரமான பணிக்கு நமது மொத்த வாழ்கையையுமே கூட அர்பணிக்க வேண்டிவரும். 65 ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் நமக்கு கிடைத்த சுதந்திரம் இன்று நள்ளிரவு மட்டுமே தனி மனிதனுக்கு சுதந்திரம் உள்ளது. சுதந்திரமாக பசித்திருக்க மட்டுமே முடியும் இன்றைய மனிதனுக்கு. ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மட்டுமே அதிகரித்து கொண்டிருக்கிறது. தேவையில்லை என்ற நிலை ஒரு போதும் இல்லை.
ஊழல் என்பது இன்று அனைத்து இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. மனிதனின் இயல்பையே இன்று ஊழல் மாற்றி விட்டது. ஒரு பொது மனிதனால் இன்று அடிக்கப்படும் கொள்ளையின் அளவை கூட கணக்கிட முடியாத அளவிற்கு பெரிய அளவில் உள்ளது. 2ஜி அலைகற்றை மற்றும் நிலக்கரி ஊழல்கள் ஒரு எடுத்துக்காட்டு.
துரதிஷ்டவசமாக இன்றைய ஆட்சியாளர்கள் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதிலே கவனம் செலுத்து கிறார்கள். இவ்விஷயத்தில் மட்டும் இடது சாரிகள் வலது சாரிகள் என்று எந்த பாகுபாடும் கிடையாது. காங்கிரஸ் ஆகட்டும பா.ஜா.கா ஆகட்டும் ஊழல் விஷயத்தில் ஒரே நிலைபாடு தான். மத்திய மற்றும் மாநில அரசுகள் தேசத்தில் வளங்களை சுரண்டி தனியார்களுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களை திருப்திபடுத்திட சொந்த குடிமக்களை அவர்களது பகுதியிலிருந்து விரட்டியடிக்கிறார்கள்.ஒரிசாவிலும் ஜார்கண்ட்யிலும் ஆதிவாசிகளின் நிலங்களை அங்கு கிடைக்கும் இயற்கை கனிம வளங்களை சுரண்டுவதற்காக அவர்களது நிலப்பகுதியை பதம் பார்க்கிறார்கள். இதற்கு எதிராக போராடுபவர்களை மவோயிஸ்ட் என்று முத்திரை குத்தி அவர்களது நெஞ்சை குண்டுகளால் பதம் பார்க்கிறார்கள் காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர்.
அணை கட்டுகிறோம், மின் உற்பத்தி செய்கிறோம் மற்றும் சாலை வசதி செய்கிறோம் என்ற பெயரில் நர்மதா ஆற்றங்கரை, கூடங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இங்ஙனம் ஒரு நவீன காலனியாதிக்க சக்திகளால் எந்த போரும் இல்லாமலும் கத்தியோ ஆயுதமோ இல்லாமலும் கொடூர சட்டங்கள் இல்லாமலும் நாம் அடிமை படுத்தப்படுகிறோம். ஒரு சில குயுக்திகளால் நம் நாட்டில் முழுவதுமாக ஊடுறுவி நமது வளங்களை தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இது நமது சட்டங்களையும் நாம் வகுத்த வழிமுறைகளையும் பயன்படுத்தியே நம்மை அடிமை படுத்திட பின்பற்றப்படும் ஒரு நவீன யுக்தியாகும்.
நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தி தனிமைபடுத்தி வருகின்றனர். நமது நாட்டை ஆளுவதோ ஒரு சிறு கூட்டம் தான். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய தலீத்கள் முஸ்லிம்கள் ஆதிவாசிகளோ ஒரு பெரும் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு வருகின்றனர். நாம் முஸ்லிம்களின் நிலையினை பற்றி பல முறை விவாதித்து இருக்கிறோம். சச்சார் அறிக்கை மற்றும் பல அறிக்கைகள் இந்நிலையை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையெல்லாம் வெறுஅனே ஏதச்சையாக நடந்தவை அல்ல என்பதை நம் நன்கறிவோம். இந்த பிற்படுத்தப்பட்ட சூழ்நிலைக்கு தள்ள பல சதிகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகம் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று கூறுவதை விட அது குறிவைக்கப்படும் சமூகம் என்ற சொல் பதமே பொறுத்தமானது. இன்றும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் முஸ்லிம் சமூகமே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நாட்டில் நடந்த பல குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் நடத்தியது என்று விசாரனையில் தெளிவான பின்பும் மூட முஸ்லிம் இளைஞர்களை விடுவதாக இல்லை. எந்த விசாரனையும் இல்லாமல் பல வருடங்கள் முஸ்லிம் இளைஞர்கள் சிறை கொட்டடிகளில் தங்கள் இளமையை கழித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்களை மட்டுமே குறி வைக்கும் ஈன செயல் நடந்து வருகிறது. உளவு துறையும் ஹிந்துத்வா சக்திகளும் இணைந்து நாட்டை ஆட்டிபடைப்பது ஒன்றும் இரசியம் இல்லை. நமது அரசியல் வாதிகளோ முதுகெலும்பில்லாதவர்களாக அவர்கள் நடத்தும் ஆட்டங்களின் கதா நாயகர்களாக இருக்கிறார்கள்.
முஸ்லிம்களை குறிவைப்பது அரசும் காவல்துறையும் உளவு துறையும் மட்டுமே என்று நினைத்து விட வேண்டாம். நமது நாட்டின் மத சாற்பற்ற தன்மையையும் ஜனநாயகத்தையும் உற்று கவனித்து வரையரைபடுத்துவாக பறைசாற்றும் பத்திரிகையோ முஸ்லிம்கள் விஷயத்தில் வேட்டையாடும் மிருகங்களாக இருந்து வருகிறது.
அப்சல் குரு தூக்கிலடப்பட்ட விதம் நமது பார்வையை திறந்து விடுவதாக உள்ளது. பொது மக்களை திருப்தி படுத்துவதற்காகவே அப்சல் குரு தூக்கிலடப்பட்டார். வீரப்பன் கூட்டாளிகளை போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கள் கூட அப்சல் குருவிற்கு கொடுக்காமல் நமது உள் துறை அமைச்சர் திரு.ஷின்டே தூக்கிலட உத்தரவிட்டுள்ளார். யாருக்கு தெரியும் இதற்கு அடுத்து பொது மக்களை திருப்தி படுத்த யாரை கொல்லப்போகிறார்கள் என்று?
முஸ்லிம்களை போலவே தலீத்களும் குறிவைக்கப்படுகிறார்கள். சமூக ரீதியான பல் துன்பங்களை முஸ்லிம்களை போலவே அவர்களும் அனுபவித்து வருகிறார்கள். வேதங்கள்,ஸ்ருமிதிகள் மற்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பல நியமங்களையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி திட்டமிடப்பட்டு தலீத்கள் மீது பல அநீதிகளை இழைத்து வருகிறார்கள். இது போன்ற துன்பங்களை அனுபவித்த சமூகத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. நாடெங்கும் தலீத்கள் வீடுகளும் தலீத் பெண்களின் மானமும் தொடர்ந்து சூரையாடப்பட்டு வருகிறது. ஒரு செத்த மாட்டின் அனவிற்கு கூட ஒரு தலீத்தின் உயிர் மதிக்கப்படுவதில்லை. ஆதிவாசிகளின் நிலையும் ஏறத்தாழ இதே நிலைதான். இந்நிலையில் தான் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்வு தேவைபடுகிறது. சம நீதி, சமூக நீதி மற்றும் சம உரிமை யை பெற வேண்டும் என்ற வேட்கையுடைய வேங்கைகள் ஆர்பரித்து எழ வேண்டும்.
என் அருமை சகோதரர்களே, எஸ்.டி.பி.ஐ இந்த இலக்கை அடைய ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ ஒரு சூடான ஜீவாலை. மக்களின் அழுகுரலுக்கும் கதறல்களுக்கும் அவர்களை திட்டமிட்டு கழுவறுப்பதற்கும் பதில் கொடுக்கவே இந்த ஜீவாலை கிளம்பியுள்ளது. இது மக்கள் தனது துன்பங்களை பற்றி எண்ணி எண்ணி நொந்து போய்விட வில்லை. மாறாக அந்த அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து உள்ளார்கள் என்பதையே பறைசாற்றுகிறது. திராவிட மண்ணிலே திராவிடர்கள் அடிமையாகி கிடந்த காலம் மாறிவிட்டது என்ற அறிகுறியே இந்த எழுச்சி. இந்த எழுச்சி ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நாம் ஒரு பயணத்தை துவங்கியுள்ளோம். ஒரு பெரும் பயணம். இது மாகபாரதம் போன்ற ஒரு பெரும் பயணம் அல்ல. மாறாக நமது முதல் மூச்சில் துவங்கி நமது இறப்பு வரை சென்று அதற்கு பின்பும் முன்னேறி செல்ல கூடிய ஒரு மாபெரும் பயணமாகும். ஒடுக்கப்பட்டோர்களின் கைகள் இணைந்து வீரு நடைபோடும் காலம் வந்து விட்டது. கர்நாடகாவிலிருந்து எழுந்த குரல்கள் உங்கள் காதுகளை துளைத்திருக்கும். உங்கள் காதுகளை துளைத்தது தலீத்கள், முஸ்லிம்கள், விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகளின் கைகள் இணைந்து விட்டது என்ற முழக்கமாகும்.
இந்த இயக்கம் நமது இந்திய திருநாட்டில் ஒரு பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு நாம் உங்கள் உறுதியான நெஞ்சத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. நமது வியர்வையும், கண்ணீரும் ரத்தமும் தான் நமது முதலீடு. கண்ணீர்கள் கீழே விழாமல் குளமாக இருக்கும் கண்களும் மாற்றத்தை ஏற்படுத்த இரவிலே கனவிலும் சிந்தனையிலும் துடித்த இதயங்களும் நம்மை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். சின்னஞ் சிறு விஷயங்களை தூக்கி எறிந்து விட்டு நம்மை சக்திபடுத்துவோம். இனி நாம் அழவே கூடாது என்று சபதம் ஏற்போம்.
நான் தலைவர் என்ற நிலையில் இருந்த ஆண்டுகள் ஒடிவிட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னும் சக்திமிக்க தலைவரும் பல சவால்களை சந்திக்கும் ஆற்றல் உடைய தலைவரும் நமக்கு தேவை. ஒரு மாற்றம் என்பது இதிலும் அவசியம். நீங்கள் எனக்கு அளித்த ஒத்துழைப்பு, அன்பு மற்றும் ஆதரவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் அதற்காக உங்களிடம் கடன் பட்டு உள்ளேன. இன்னும் இந்த ஒரு கண்ணியத்தை கொடுத்த இறைவனுக்கு நான் மிகுந்த நன்றியிளை செலுத்த கடமை பட்டுள்ளேன்.
நான் தலைவராக இருந்த போது என் மீது சுமத்திய அனைத்து பொருப்புகளையும் முழுமையாக நிறைவேற்றி விட்டேன் என்று கூற முடியாது. எனது செயல்பாட்டிலும் சில குறைபாடுகளும் உள்ளது. ஆனால் எனது ஆற்றலுக்கு உட்பட்டு எனது அறிவுக்கு எட்பட்டு என்னால் இயன்றதை நான் செய்தேன். மீண்டும் உங்கள் அனைவர் மீதும் எனது அன்பும் பரிவையும் நான தெரிவித்து கொள்கிறேன். அனைத்து புகழும் வல்ல இறைவன் ஒருவனுக்கே உரித்தானது. ஜெய் ஹிந்த்
0 கருத்துரைகள்:
Post a Comment