பரமக்குடி ஒன்றியம் தோளூர் கிராமத்தில் திடீரென 25.03.2013 விஷக்காய்ச்சல் பரவியது.சுமார் 40க்கும் அதிகமானோர் இந்த விசக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இதனை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோளூர் கிளை தலைவர் ஜீவா தலைமையில் முதலுதவி பணிகள் முடுக்கி விடப்பட்டன.
மேலும் இச்சம்பவத்தை அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் பரமக்குடி தொகுதி துணைத்தலைவர் சீதக்காதிர்,செயலாளர் அப்துல்லா சேட்,பரமக்குடி மேற்கு கிளை தலைவர் முருகன்,செயலாளர் லோக செல்வம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து மருத்துவ உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய முறையில் விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மேலும் பாதிக்கப்பட்ட அக்கிராமத்தினை ஆய்வு செய்யும் விதமாக அரசு மருத்துவ குழுவினருடன் இன்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் பரமக்குடி தொகுதி செயலாளர் அப்துல்லா சேட்,பரமக்குடி நகர் செயலாளர் அட்வகேட் லிங்கமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் தோளூர் கிராமத்தை பார்வையிட்டு விசக்காய்ச்சல் பரவுவதற்கான காரணத்தையும்,அதனை தடுப்பதற்கான வழிமுறைகளையும் அக்கிராம மக்களிடையே விளக்கி கூறினர்.மேலும் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவ குழுவினர் இன்றும் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment